Monkey Pox: கேரளா வரை வந்து விட்ட குரங்கம்மை!உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரை என்ன?
Monkey Pox: நிபா வைரஸ் தொடங்கி தற்போது உள்ள குரங்கம்மை வரை வெளிநாடுகளில் பரவக்கூடிய நோய்முதலில் கேரள மாநிலத்தையே முதலில் பாதிக்கிறது. ஆப்பிரிக்காவில் இருந்த குரங்கம்மை கேரள மாநிலம் வரை வந்திருப்பது அருகாமையில் இருக்கும் தமிழ்நாட்டிற்க்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும்.
கடந்த 2022 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்கா நாடுகளில் முதன் முதலாக குரங்கம்மை நோய் முதல் முதலாக குரங்குகளிடம் இருந்து இந்நோய் பரவியது. இந்த நோய் பாதிப்பு அதிகமாகும் சமயத்தில் இறப்பு நேரிடும் வாய்ப்பு உள்ளது. நிபா வைரஸ் தொடங்கி தற்போது உள்ள குரங்கம்மை வரை வெளிநாடுகளில் பரவக்கூடிய நோய் முதலில் கேரள மாநிலத்தையே முதலில் பாதிக்கிறது. ஆப்பிரிக்காவில் இருந்த குரங்கம்மை கேரள மாநிலம் வரை வந்திருப்பது அருகாமையில் இருக்கும் தமிழ்நாட்டிற்க்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். சமீபத்தில் ஐக்கிய அரபு அமீகத்தில் இருந்து திரும்பிய38 வயது இளைஞர் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குரங்கம்மை (MPox)
குரங்கம்மை என்பது குறங்குகளிடம் இருந்து பரவும் ஒரு வைரஸ் தொற்று ஆகும். இது நோய் உள்ளவர் அருகில் இருப்பதாலோ, அவர் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தும் போதோ எளிமையாக பாவுகிறது. இந்த தொற்று காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி, சோர்வு ஆகிய அறிகுறிகளுடன் ஆரம்பிக்கும். தொடர்ந்து முகம், உள்ளங்கைகள், உள்ளங்கால்கள், இடுப்பு, பிறப்புறுப்பு என உடலின் பல பகுதிகளில் சிறிய நீர் கொப்புளங்கள் தோன்றும்.
இந்த நோய் சின்னம்மை ஏற்படுத்தும் நோய் கிருமி குடும்பத்தை சேர்ந்தது ஆகும். 14 முதல் 20 நாட்களில் குரங்கம்மை அதுவாகவே குணமடையும். சில சமயங்களில் இது மரணத்தை உண்டாக்கும். எனவே உலக சுகாதர நிறுவனம் அவசர நிலையை பிரகடனப் படுத்தியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
உலக சுகாதார நிறுவன சார்பில் பல அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் நெருக்கத்தில் இருப்பவர்களுக்கே இந்த நோய் வேகமாக பரவுகிறது. எனவே குரங்கம்மை பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் பகுதியில் இருக்கும் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குரங்கம்மை பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். குரங்கம்மை அறிகுறிக்க ஏதேனும் தெரிந்தால் உடனே அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுக வேண்டும்.
விலங்குகளிடம் இருந்து இந்த நோய் தொற்று பரவுவதால், அவைகளிடம் இருந்தும் விலகி இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நோய் உள்ளவர்கள் முழவதும் மற்றவாகளிடம் இருந்து தனிமை படுத்திக் கொள்ள வேண்டும். தேவையற்ற வதந்திகளை நம்ப கூடாது. அரசு சார்பில் கூறப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்.
கேரளாவில் குரங்கம்மை
சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பியுள்ளார். அவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அம்மாநில அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கேரளாவில் நோய் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த அவர்களது உறவினர்களுக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை சார்பிலும் பல மருத்துவமனைகளில் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கேரள எல்லைகளில் உள்ள தமிழ்நாட்டு பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. முழு சோதனைக்கு பின்னரே அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்படுகின்றன. இந்தியாவின் விமான நிலையங்களிலும் வெளி நாடுகளில் இருந்து வருபவர்கள் முழுவதும் கண்காணிக்கப்படுகின்றனர். முகக்கவசம் அணிவது, அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் மருத்துவமனை செல்லவும் மக்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்