Exclusive : திருமணத்துக்கு காத்திருக்கும் மணப்பெண்ணா? எப்போது, எப்படி தயாராகவேண்டும் - மருத்துவர் அறிவுரை
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Exclusive : திருமணத்துக்கு காத்திருக்கும் மணப்பெண்ணா? எப்போது, எப்படி தயாராகவேண்டும் - மருத்துவர் அறிவுரை

Exclusive : திருமணத்துக்கு காத்திருக்கும் மணப்பெண்ணா? எப்போது, எப்படி தயாராகவேண்டும் - மருத்துவர் அறிவுரை

Priyadarshini R HT Tamil
Nov 10, 2024 01:07 PM IST

திருமணத்துக்கு காத்திருக்கும் மணப்பெண்ணா நீங்கள்? ஒரு மாதம் முன்னரே தயாராக வேண்டும். அது எப்படி என்று சில குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. படித்து பயன்பெறுங்கள்.

HT Exclusive : திருமணத்துக்கு காத்திருக்கும் மணப்பெண்ணா? இதோ எப்போது முதல் எப்படி தயாராகவேண்டும் எனப் பாருங்கள்!
HT Exclusive : திருமணத்துக்கு காத்திருக்கும் மணப்பெண்ணா? இதோ எப்போது முதல் எப்படி தயாராகவேண்டும் எனப் பாருங்கள்!

மணமகள் திருமணத்துக்கு முன்னர் ஆரோக்கிய சருமம் பெற பின்பற்றவேண்டிய குறிப்புகள் 

டாக்டர் வராய்ச் தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில், மணமகள்களுக்கு 5 டிப்ஸ்களை வழங்குகிறார். ஒரு மாதத்தில் அவர்களுக்கு திருமணம் நடக்கவுள்ளது என்றால், அவர்கள் ஒரு மாதத்திற்கு முன்னரே அவர்களின் சரும பராமரிப்பைத் துவங்கிவிடவேண்டும் என்று கூறுகிறார். 

திருமணத்துக்கு தயாராகும் பெண்கள் புதிதாக எந்த ஒரு ப்ராடக்டையும் இப்போது பயன்படுத்தக்கூடாது. அவர்கள் புதிய ஃபேசியல் செய்து பரிசோதிக்கக் கூடாது. அதற்கான நேரம் இது கிடையாது. நீங்கள் புதிதாக ஒரு பொருளை இப்போது பரிசோதித்து பார்த்து, அது ஏதேனும் பக்கவிளைவை ஏற்படுத்தி விட்டால், உங்களின் வழக்கமான பொலிவும் குறைந்துவிடும். எனவே இப்போது எவ்வித புதிய முயற்சிகளையும் எடுக்காதீர்கள். உங்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டவுடனே நடக்கிறது. நாட்கள் குறைவாக உள்ளது என்றால், குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு முன்னராவது முதல் ஃபேசியலை செய்துவிடவேண்டும். முதல் நிகழ்ச்சிக்கு ஒரு வாரம் முன்னர் ஃபேசியல் கட்டாயம் என்று வாரிச் கூறுகிறார். 

முகச்சவரம்

உங்கள் முகத்தில் சிறிய பூனை முடிகள் அதிகம் இருக்கும் என்றால், நீங்கள் கட்டாயம் முகத்தை சவரம் செய்துகொள்ளவேண்டும் என்று அவர் கூறுகிறார். ஆனால் அதுபோல் சவரம் செய்தால் மீண்டும் முகத்தில் முடி அடர்ந்து வளர்ந்துவிடுமோ என்ற அச்சம் உங்களுக்கு ஏற்படும். ஆனால் கவலையே வேண்டாம் அது நடக்காது. எனவே உங்கள் மேக்அப் நிபுணர் அறிவுறுத்தினால், கட்டாயம் அந்த பூனை முடிகளைப் போக்க நீங்கள் மேக் அப் செய்துகொள்ளுங்கள். உங்கள் முகத்துக்கு அது மிருதுவான பொலிவைத்தரும். நீங்கள் மேக் அப் செய்யும்போது அது நன்றாக இருக்கும். வாக்சிங் செய்தால், உங்களின் முகப்பருக்களை அது சுருங்கச்செய்யும். எனவே அதை தவிர்க்கலாம்.

தலைமுடி

தலைமுடியை ஸ்மூதனிங் செய்ய விரும்பினால் செய்யுங்கள். ஆனால் கெரட்டின் செய்யாதீர்கள். இதனால் உங்களுக்கு பிற்காலத்தில் கொத்துக்கொத்தாக முடி கொட்டும். ஹேர் போடாக்ஸ் செய்யலாம். அது குறைவாக பக்கவிளைவுகளை மட்டுமே தரும். அடுத்து நீங்கள் மேக்அப் செய்யும் முன் உங்கள் முகத்தில் மாய்சுரைசர் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்யவேண்டும். ஷீட் முகத்திலே இருக்கட்டும். கண்களை மூடி 15 நிமிடட் டீ பேக் வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் பாருங்கள் முகத்தில் தோன்றும் பொலிவை, உங்கள் மணமகன் உங்களையே பார்த்துக்கொண்டிருப்பார். எல்லாவற்றையும்விட ஒரு நல்ல புன்னகை எப்போதும் உங்கள் முகத்தில் இருந்துகொண்டே இருப்பது நல்லது.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.