OTT Release This Week: கொஞ்சம் ஏமாற்றம் தான்.. இந்த வாரம் ஓடிடியில் குறைவாக வெளியாகும் தமிழ் படங்கள்
OTT Release This Week: இந்த வாரம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் தமிழ் படங்கள் மற்றும் அதன் முழு விவரத்தை பார்க்கலாம்.

OTT Release This Week: இந்த வருடம் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம், கல்கி 2898 ஏ.டி. தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, பிரபாஸ், கமல் ஹாசன், திஷா பதானி, அன்னா பென், சாஸ்வதா சாட்டர்ஜி, ஷோபனா மற்றும் ஒரு சில கௌரவ நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த அதிரடி- சாகச திரைப்படம் இந்து காவியமான மகாபாரதம் மற்றும் அறிவியல் புனைகதை ஆகியவற்றின் திருமணமாகும்.
ரூ .1,100 கோடிக்கு மேல் வசூல்
வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்த பெரிய பட்ஜெட் படம் ஜூன் 27 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. வெளியானதிலிருந்து, இந்த படம் 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ .1,100 கோடிக்கு மேல் சம்பாதித்து உள்ளது.