Home Remedies: அன்றாடச் சிரமங்களைத் தீர்க்கும் அருமையான 12 பாட்டி வைத்தியங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Home Remedies: அன்றாடச் சிரமங்களைத் தீர்க்கும் அருமையான 12 பாட்டி வைத்தியங்கள்!

Home Remedies: அன்றாடச் சிரமங்களைத் தீர்க்கும் அருமையான 12 பாட்டி வைத்தியங்கள்!

I Jayachandran HT Tamil
May 24, 2023 01:21 PM IST

அன்றாடச் சிரமங்களைத் தீர்க்கும் அருமையான 12 பாட்டி வைத்தியங்கள் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

பாட்டி வைத்தியங்கள் 12
பாட்டி வைத்தியங்கள் 12

அந்த வகையில் இங்கு பயனுள்ள பன்னிரண்டு குறிப்புகள் தரப்பட்டுள்ளன. நாம் நோயின்றி வாழ்வதற்கு அவசியமான இந்த எளிய வீட்டு மருத்து குறிப்புக்களை பயன்படுத்துவோம்.

1. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

2.ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் தேக்கரண்டி மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.

3.ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

4.சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

5.படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

6.சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

7.விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

8.பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

9.வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

10. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

11. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

12. விரலி மஞ்சளை சுட்டு அதன் புகையை மூக்கில் ஆழ உறிஞ்சினால் மூக்கடைப்பு, மூக்கிலிருந்து நீர்க்கசிவு, சைனஸ் தொந்தரவுகள் உடனடியாக சரியாகிவிடும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.