‘உன்னால் முடியும் தம்பி’ என்னால் முடியுமா என சந்தேகிக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கு 10 டிப்ஸ்!
தங்கள் மீது சந்தேகம் கொண்ட பிள்ளைகளுக்கு பெற்றோர் எப்படி உதவ முடியும்.
உங்கள் குழந்தைகள் தங்களின் மீதே அதிக சந்தேகம் கொண்டு வாழ்கிறார்களா? அவர்கள் அதிலிருந்து வெளியேற முடியாமல் உழல்கிறார்களா? குழந்தைகளுக்கு தங்களால் முடியுமா என்ற எண்ணம் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். குழந்தைகள் தங்கள் மீதான தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வேளையில் பெரும்பாலான குழந்தைகளுக்கு தங்கள் மீதான சந்தேகம் அதிகம் ஏற்பட செய்கிறது. பெற்றோர்கள்தான் அவர்களுக்கு தூணாக இருக்கவேண்டும். அவர்களை வழிநடத்த வேண்டும். இதுபோன்ற எண்ணம் குழந்தைகளின் நம்பிக்கையை குலைக்கும் என்பதால், அதில் இருந்து எவ்வாறு வெளியேறுவது என்று பாருங்கள்.
அவர்களின் தவறுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்
தவறுகள்தான் கற்றலின் அங்கம் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக்கூறுங்கள். அதில் இருந்து மீள்வது எப்படி என்றும் உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். அவர்கள் பின்னடைவுகளில் இருந்து எப்படி வெளியேறுவது எப்படி என்று பாருங்கள். அவர்கள் தோல்விகளைக் கண்டு அஞ்சக்கூடாது என்பதை கவனத்தில்கொள்ளுங்கள்.
அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள்
உங்கள் குழந்தைகளின் உணர்வுகள் உண்மை மற்றும் அர்த்தமுள்ளது என்பதை அங்கீகரியுங்கள். இது அவர்களை அவர்கள் புரிந்துகொள்ள உதவும். அவர்களுக்கு அவர்களின் உணர்வுகள் மதிக்கப்படுகிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். மேலும் அவற்றை நம்மால் கையாள முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும். அதை அச்சத்துடனும், அவமானத்துடனும் அணுகமாட்டார்கள்.
சமூக சவால்கள் குறித்து அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்
உங்கள் குழந்தைகளுக்கு கடும் சமூக சூழல்களை எப்படி எதிர்கொள்வது என்பதை அவர்களுக்கு நீங்கள் பொறுப்புடன் நடந்துகொள்வது என்பதில் இருந்தும், தீர்வுகளை எட்டுவதில் இருந்தும் கற்றுக்கொள்ள வழிகாட்டுங்கள். இது அவர்களுக்கு இந்த சமூக சூழலில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள உதவும்.
எதிர்மறை எண்ணங்கள்
உங்கள் குழந்தைகள் கடும் சுய விமர்சனங்களைக் கொண்டு வரும்போது, அவர்களின் பலம் என்னவென்று அவர்களுக்கு அறிவுறுத்துங்கள். அவர்களை தன்னம்பிக்கையுடன் நடக்க தங்களைப் பற்றிய சுயபரிசோதனை செய்ய ஊக்குவியுங்கள்.
அவர்களின் ஆர்வத்தை வளர்க்க உதவுங்கள்
உங்கள் குழந்தைகளின் ஆர்வத்தை அவர்கள் கற்றுக்கொள்ள உதவுங்கள். இதுபோல் அவர்கள் ஆர்வங்களை அவர்கள் தொடர்ந்து செல்லும்போது, அவர்கள் தங்களை அடையாளம் கண்டுகொள்கிறார்கள் மற்றும் அவர்களின் மதிப்பும் அவர்களுக்குத் தெரிகிறது.
உண்மையான இலக்குகள்
எட்டக்கூடிய இலக்குகளை வகுக்க உங்கள் குழுந்தைகளுக்கு உதவுங்கள். அது சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருக்கலாம். அவர்களின் இலக்கை சிறுசிறு படிகளாக எப்படி எட்ட வேண்டும் என்பதை கற்றுக்கொடுங்கள். அபப்போதுதான் அவர்களுக்கு சாதித்துவிட்ட தன்னம்பிக்கை பிறக்கும்.
தோற்க அனுமதியுங்கள்
உங்கள் குழந்தைகள் தோல்வியை அனுபவிக்கட்டும். பாதுகாப்பான சூழலில் அவர்கள் தோல்வியை அனுபவிக்கும்போது, அவர்கள் கற்கிறார்கள். தவறுகளால் அவர்களை அவர்களே புரிந்துகொள்ளவும், நாம் தோற்றுவிட்டால் இந்த உலகமே முடிந்துவிடாது என்ற எண்ணமும் ஏற்படும்.
அவர்களின் பலத்தை கண்டுபிடித்து கொண்டாடுங்கள்
உங்கள் குழந்தைகள் தங்களின் தனிப்பட்ட திறமைகளை வெளிக்கொணர உதவுங்கள். அவர்களின் நல்ல பழக்கவழக்கங்களை ஊக்கப்படுத்துங்கள். அவர்களின் சாதனைகளைக் கொண்டாடுங்கள். இது அவர்களின் திறமையை வளர்க்கும். மேலும் படிப்பு கடந்த அவர்களின் வெற்றிக்கு வழிவகுக்கும்.
புதிய அனுபவங்கள் கிடைக்க ஊக்கப்படுத்துங்கள்
அவர்களின் பலதரப்பட்ட திறமைகளையும் அவர்கள் வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உற்சாகப்படுத்துங்கள். இதனால் அவர்களுக்கு தன்னம்பிக்கை வளர்கிறது. இதனால் அவர்கள் பல்வேறு சவால்களை கற்றுக்கொண்டு, எதிர்கொள்கிறார்கள்.
நிபந்தனையற்ற அன்பு
உங்களின் அன்பு நிபந்தனையற்றதாக இருக்கவேண்டும். அவர்கள் தோற்றாலும், வெற்றி கொண்டாலும் அந்த அன்பில் மாற்றம் இருக்கக்கூடாது. இதனால் அவர்களுக்கு வலுவான அடித்தளம் கிடைக்கிறது. அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் சுயமதிப்பும் அதிகரிக்கிறது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்