Tamil News  /  Latest News  /  Tamil Latest News Updates 1/4/2023

Breaking News

Tamil Latest News Updates: ஜி.கே.வாசன் கண்டனம்!

இன்று (1-04-2023) தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு உள்ளிட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்

Sat, 01 Apr 202313:46 IST

ஜி.கே.வாசன் கண்டனம்!

சென்னையில் உள்ள ரோஹிணி திரையரங்கில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை படம் பார்க்க அனுமதிக்காதது கண்டிக்கத்தக்கது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Sat, 01 Apr 202311:31 IST

அமுல் நிறுவன பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்வு

அமுல் நிறுவனம் உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது. 

Sat, 01 Apr 202310:04 IST

பஞ்சாப் - கொல்கத்தா மோதல்!

 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் மாநில மொகாலியில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

Sat, 01 Apr 20238:58 IST

விடுதலை படம் எப்படி? - மோகன் ஜி பேச்சு 

இரண்டு மூன்று நாட்களாவது விடுதலை படத்தின் தாக்கம் நமக்குள் இருக்கும். இதை எப்படி படமாக்க வேண்டும் என்ற சிந்தனைக்குள் வெற்றிமாறன் சார் எப்படிச் சென்றார் என்று எனக்குத் தெரியவில்லை.

இந்த படம் செய்யலாமா? வேண்டாமா? என்ற தயக்கம் எல்லாருக்குமே இருக்கும். தென் மாவட்டங்களில் உள்ள மக்கள் இந்த படத்தை பார்க்கும் போது மிகவும் பர்சனலாக இதனை கனெக்ட் செய்து கொள்வார்கள். விடுதலை திரைப்படத்தில் வாத்தியார் பெருமாள் போன்ற கதாபாத்திரத்தில் உண்மையில் இருப்பவர்களின் ஆழம் எனக்கு தெரியும். நிஜ பெருமாளோடு நான் தொடர்பில் இருக்கிறேன்.

மோகன் ஜி 

Sat, 01 Apr 20238:50 IST

வைக்கம் நூற்றாண்டு விழா: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

கேரள மாநிலத்தில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா சென்றார். கொச்சின் விமான நிலையத்தில் கேரள மாநில தொழில் துறை அமைச்சர் பி. ராஜீவி வரவேற்றார்.

Sat, 01 Apr 20234:48 IST

நோ ஹெல்மெட் நோ பெட்ரோல்!

கடலூரில் ஹெல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் கிடையாது என்று கடலூர் வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Sat, 01 Apr 20232:03 IST

தமிழக முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் இதோ!

•புழல் ஏரியில் நீர் இருப்பு 2432 மில்லியன் கனஅடியாக உள்ளது; 159 கனஅடி நீர் வெளியேற்றம்

•சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 10 கனஅடியாக உள்ளது; நீர் இருப்பு 820 மில்லியன் கனஅடியாக உள்ளது

•கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர் இருப்பு 500 மில்லியன் கனஅடியாக உள்ளது; நீர்வரத்து 10 கனஅடியாக உள்ளது

Sat, 01 Apr 20232:01 IST

கள்ளக்குறிச்சி சாலை விபத்து-2 பேர் பலி

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூர் பகுதியில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த மினி லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர் மேலும் 2 பேர் காயம் அடைந்துள்ளனர்.

Sat, 01 Apr 20231:48 IST

அந்தமான் நிகோபர் தீவில் லேசான நிலநடுக்கம்

அந்தமான் நிகோபர் தீவின் வடகிழக்கே போர்ட்பிளேர் பகுதியில் இருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் இன்று அதிகாலை 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது

Sat, 01 Apr 20231:48 IST

வேலூரில் மழைக்கு வாய்ப்பு

வேலூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Sat, 01 Apr 20231:47 IST

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை இன்று ரூ. 76 குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் ஒரு வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 2 ஆயிரத்து 258 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது

Sat, 01 Apr 20231:21 IST

சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள புலம் பெயர்ந்தவர்கள் குறித்து கணக்கெடுப்பு – மணிப்பூர் முதல்வர்

வீடு வீடாகச் சென்று நடத்தும் கணக்கெடுப்பு சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள புலம்பெயர்ந்தவர்களை கண்டுபிடிக்க உதவும். தேசிய குடிமகன் பதிவு தேவையெனில் மத்திய அரசிடம் இருந்து அதற்கு அங்கீகாரம் வேண்டும். அதை நாங்கள் தனியாக செய்ய முடியாது. நாங்கள் ஏற்கனவே அமைத்துள்ள கமிஷன் மூலம் புலம்பெயர்ந்து சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ளவர்களை கண்டுபிடிப்போம் என்று மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் தெரிவித்துள்ளார்.    

Sat, 01 Apr 20231:16 IST

கலாஷேத்ரா மாணவிகள் போராட்டம் வாபஸ் 

பாலியல் தொல்லை குற்றச்சாட்டில் சென்னை போலீஸ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததையடுத்து கலாஷேத்ரா ருக்மிணி தேவி கலைக்கல்லூரி மாணவிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டார்கள். 

Sat, 01 Apr 20231:07 IST

போபால் – டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை இன்று துவக்கம் 

போபால் – டெல்லி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து துவக்கி வைக்கிறார். 11வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 708 கிலோ மீட்டர் தூரத்தை 7.45 மணி நேரத்தில் கடக்கிறது. மத்திய பிரதேசத்தின் ராணி கமலப்பட்டி ரயில் நிலையத்தில் இருந்து துவக்கி வைக்கிறார்.

Sat, 01 Apr 20230:54 IST

இன்றைய பெட்ரோல் டீசல் விலையை தெரிஞ்சுக்கலாம் வாங்க!

சென்னையில் இன்று (ஏப்ரல்.1) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதன் மூலம் 315 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

பகிர்வு கட்டுரை