துங்காவால் கடத்தப்பட்ட தீபா, கீதா.. கார்த்திக்கு வந்த வார்னிங் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
துங்காவால் கடத்தப்பட்ட தீபா, கீதா, கார்த்திக்கு வந்த வார்னிங் என ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் துங்கா தீபாவை அழைத்து வரும் வேனுக்குள் ஏறிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தீபா யார் என குழம்பும் துங்கா
அதாவது, துங்கா ஒரு கட்டத்தில் தீபாவை வேனுக்குள் பார்த்து விடுகிறான். இதைத்தொடர்ந்து தீபாவை கடத்திக் கொண்டு குடோனுக்கு வருகிறான். அதே நேரத்தில் தீபா வேடத்தில் இருக்கும் கீதாவையும் பார்த்து விடுகிறான். இதில் யார் தீபா? யார் கீதா என்று தெரியாமல் குழம்பும் துங்கா இருவரையும் கடத்தி குடோனுக்கு அழைத்து வருகிறான்.
இருவரையும் குடோனுக்குள் அடைத்து வைக்கும் துங்கா அடுத்ததாக கார்த்திக்கு போன் போட்டு இப்போ உன் பொண்டாட்டி தீபா, கீதா என ரெண்டு பேரும் என் கஸ்டடியில் தான் இருக்காங்க. அவங்களை மீட்க நீ இங்க வந்து தான் ஆகணும் என்று சொல்கிறான்.
