உண்மையைச் சொன்னா உசுரு இருக்காது?; கடைசி நொடியில் காப்பாற்றிய தரமலிங்கம்; அல்லோல்படும் ஷக்தி! - கார்த்திகை தீபம் அப்டேட்
உண்மையைச் சொல்ல துணிந்த ஷக்தி, துங்கா கொடுத்த ஷாக்.. கார்த்திக், தீபா ஒன்று சேரப்போவது எப்போது? கார்த்திகை தீபம் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தர்மலிங்கம் விடாமல் நாதஸ்வரம் வாசிக்க தொடங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கார்த்திகை தீபம் அப்டேட்
அதாவது, கோயிலுக்கு வந்த ஷக்தி தர்மலிங்கம் விடாமல் நாதஸ்வரத்தை வாசிப்பதை பார்த்து, ஒருவேளை இவர்தான் தீபாவின் அப்பாவாக இருப்பாரோ என்று சந்தேகம் கொள்கிறாள். பிறகு தீபா குறித்த உண்மையை சொல்ல போகும் நேரத்தில், துங்கா அங்கு வந்து விட்டான்.
நான் இருக்கும் போது தீபா பத்தி எப்படி சொல்வாய் என்று கேள்வி எழுப்ப, தர்மலிங்கம் துங்காவை பிடித்து கொண்டு, ஷக்தியை தப்பித்து போகச் சொல்கிறார். இதனையடுத்து ஷக்தியும் தப்பி ஆசிரமம் வந்து விடுகிறாள்.