தீபாவுடன் வந்த கார்த்திக்.. அன்பு மழையில் தீபா.. என்ன ஆனாள் ஐஸ்வர்யா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
துங்காவால் கடத்தப்பட்ட தீபாவை கார்த்திக் மீட்டு வந்ததையடுத்து, அனைவரும் தீபாவிடம் அன்பு மழை பொழிந்து வருகின்றனர்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தீபாவை மீட்டு கொண்டு வர ஐஸ்வர்யாவை தேடி போலீஸ் வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கச்சேரி அரங்கத்தில் தேடுதல்
அதாவது, கச்சேரி நடக்கும் இடத்திற்கு வந்த போலீஸ் ஐஸ்வர்யா துப்பாக்கியுடன் தப்பி வந்து விட்டதாக சொல்லி அதிர்ச்சி கொடுக்கின்றனர். போலீஸ் கச்சேரி நடக்கும் அரங்கம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்துகின்றனர்.
மாறுவேடத்தில் இருக்கும் ஐஸ்வர்யா போலிஸிடம் சிக்க கூடாது என இங்கும் அங்கும் ஓடி ஒளிகிறாள். இதற்கிடையில் கார்த்திக் தீபாவுடன் வந்து சேர்கிறான், தீபாவை பார்த்ததும் எல்லாரும் அவளை கட்டியணைத்து அன்பை கொட்டுகின்றனர். ஆனால் தீபா எதுவும் உணராமல் பித்து பிடித்தது போல் இருக்கிறாள்.