தீபாவை நெருங்கிய துர்கா.. மண்டபத்துக்குள் நுழைந்த ஐஸ்வர்யா, கார்த்திக்கு காத்திருக்கும் சவால் - கார்த்திகை தீபம்!
Karthigai Deepam : தீபாவை நெருங்கிய துர்கா, மண்டபத்துக்குள் நுழைந்த ஐஸ்வர்யா, கார்த்திக்கு காத்திருக்கும் சவால் என கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து இதில் பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக்கு தீபா கச்சேரிக்கு வரும் தகவல் தெரிய வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, கச்சேரி நடக்கும் இடத்தில் கீதா கார்த்தியிடம் நான் தீபாவை போல கெட்டப் மாற்றிக் கொள்கிறேன். அதனால் துர்காவுக்கு குழப்பம் ஏற்படும். தீபா கச்சேரி நடக்கும் இடத்திற்கு வருவது கொஞ்சம் ஈசியாக இருக்கும் என்று சொல்லி தீபாவை போல கெட்டப்பை மாற்றிக் கொள்கிறாள்.
பில்டப் ஒரு பக்கம்
மறுபக்கம் சக்தி நர்ஸ் மற்றும் ஆசிரமத்தில் இருப்பவர்கள் தீபாவுடன் கச்சேரி நடக்கும் இடத்தை நோக்கி வர வேனை வழி மறிக்கும் துங்கா தன்னுடைய கார் ரிப்பேர் ஆகி ,விட்டதாக பொய் சொல்லி உதவி கேட்க துங்கா என தெரியாமல் அவனை வேனில் ஏற்றுக் கொள்கின்றனர். துங்கா தீபாவை பார்த்து விடுவானா என்ற பில்டப் ஒரு பக்கம் எகிறுகிறது.
இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா துணி கடைக்கு வந்து சிங் போல தனது கெட்டப்பை மாற்றிக்கொண்டு வெளியே வர கடை ஓனர் இதுகுறித்து கேள்வி கேட்க அவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி கச்சேரி நடக்கும் இடத்திற்கு வருகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்