Alphonse Puthren: திரையரங்கிற்கு சினிமாவை இயக்கப் போவதில்லை - நோயால் பாதிக்கப்பட்ட அல்போன்ஸ் புத்திரன் உருக்கம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Alphonse Puthren: திரையரங்கிற்கு சினிமாவை இயக்கப் போவதில்லை - நோயால் பாதிக்கப்பட்ட அல்போன்ஸ் புத்திரன் உருக்கம்!

Alphonse Puthren: திரையரங்கிற்கு சினிமாவை இயக்கப் போவதில்லை - நோயால் பாதிக்கப்பட்ட அல்போன்ஸ் புத்திரன் உருக்கம்!

Marimuthu M HT Tamil
Oct 30, 2023 02:00 PM IST

ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாட்டால் திரைப்பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆட்டிஸம் ஸ்பெக்டரம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட அல்போன்ஸ் புத்திரன்
ஆட்டிஸம் ஸ்பெக்டரம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட அல்போன்ஸ் புத்திரன்

தமிழ் சினிமாவில் நேரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர், அல்போன்ஸ் புத்திரன். இப்படத்தை தமிழ், மலையாளம் ஆகிய இருமொழிகளிலும் இயக்கி இரண்டு மொழிகளில் ஹிட் அடிக்கச் செய்தவர். அதன்பின், இவர் நிவின் பாலியை வைத்து, ஒரு இளைஞரின் மூன்று விதமான காதல் கதைகளைப் பற்றிப் பேசும் வகையில் இயக்கிய படம் தான், பிரேமம். இப்படம் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய ஹிட்டானது. குறிப்பாக, இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. அங்கும் பரவலாக கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் மூலம் இந்தியில் உள்ள முக்கிய இயக்குநர்கள் வரை, அல்போன்ஸ் புத்திரனின் பெயர் ரீச் ஆகி, அழைத்துப்பேசும் அளவுக்கு உயர்ந்தார். அதன்பின்,7ஆண்டுகள் இடைவெளிக்குப் பின், அவர் இயக்கிய கோல்ட் படம் மலையாளத்தில் வெளியாகி வரவேற்பினைப் பெற்றது.

அதன்பின், கிஃப்ட் என்னும் படத்தினை இயக்குவதில் ஆர்வம் காட்டி வந்த அல்போன்ஸ் புத்திரன், தற்போது ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர் என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியிட்டிருக்கும் தகவல் தென்னிந்திய திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருகிறது.

இதுகுறித்து அல்போன்ஸ் புத்திரன் வெளியிட்டுள்ள பதிவில், 'நான் சினிமாவிற்கு திரைப்படங்களை இயக்கப்போவதை நிறுத்தப்போகிறேன். எனக்கு ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர் என்னும் நோய் நேற்று கண்டறியப்பட்டுள்ளது. நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. நான் எனது பணிகளை பாடல்களை எடுப்பதிலோ, வீடியோக்கள் எடுப்பதிலோ மற்றும் குறும்படங்கள் எடுப்பதிலோ செலவுசெய்யப்போகிறேன். அதிகப்பட்சமாக ஓடிடியில் எனது பங்களிப்பு இருக்கும். என்னால் சினிமாவை விட்டுப்போக முடியாது. அதனால், எனக்கு வேறு வழிதெரியவில்லை. நான் யாருக்கும் உறுதியளிக்க விரும்பவில்லை. ஏனெனில், அதனை என்னால் கடைப்பிடிக்கமுடியாது. ஆரோக்கியமின்மை அல்லது கணிக்கமுடியாத வாழ்வு என்பது சினிமாவில் வரும் இடைவேளை பஞ்ச் போல் உள்ளது’ என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://www.whatsapp.com/channel/0029Va9NEUA7IUYU4eBTc81v

 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.