ரஜினிகாந்த் சொத்து மதிப்பு தெரியுமா?.. பல கோடி மதிப்புள்ள கார்கள்.. சொத்து விவரங்கள் இதோ!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ரஜினிகாந்த் சொத்து மதிப்பு தெரியுமா?.. பல கோடி மதிப்புள்ள கார்கள்.. சொத்து விவரங்கள் இதோ!

ரஜினிகாந்த் சொத்து மதிப்பு தெரியுமா?.. பல கோடி மதிப்புள்ள கார்கள்.. சொத்து விவரங்கள் இதோ!

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 18, 2024 07:00 AM IST

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறார். அதேபோல மிகப்பெரிய ஆடம்பர வாழ்க்கையும் அனுபவித்து வருகிறார். பல கார்கள் மற்றும் சொகுசு வீடுகள் என மிகப் பெரிய சொத்து கொண்டவர்களில் ரஜினிகாந்த் ஒருவர். இவருடைய சொத்து விவரங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

ரஜினிகாந்த் சொத்து மதிப்பு தெரியுமா?.. பல கோடி மதிப்புள்ள கார்கள்.. சொத்து விவரங்கள் இதோ!
ரஜினிகாந்த் சொத்து மதிப்பு தெரியுமா?.. பல கோடி மதிப்புள்ள கார்கள்.. சொத்து விவரங்கள் இதோ!

நடிகர் ரஜினிகாந்த்

தனது தனித்துவமான ஸ்டைல் மற்றும் திறமையால் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை தன்வசம் ஆக்கிக் கொண்டவர். இளம் நாயகர்களோடு தற்போது போட்டி போட்டுக் கொண்டு பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறார். அதேபோல மிகப்பெரிய ஆடம்பர வாழ்க்கையும் அனுபவித்து வருகிறார். பல கார்கள் மற்றும் சொகுசு வீடுகள் என மிகப் பெரிய சொத்து கொண்டவர்களில் ரஜினிகாந்த் ஒருவர். இவருடைய சொத்து விவரங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

தற்போது இருக்கக்கூடிய நடிகர்களின் மிகப்பெரிய சம்பளம் வாங்கக்கூடிய நடிகராக ரஜினிகாந்த் திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான வேட்டையன் திரைப்படத்தில் மட்டும் இவர் 125 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். அதிகபட்சமாக ஒரு படத்தில் நடித்தால் ரஜினிகாந்த் 270 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.

ரஜினிகாந்த் அறக்கட்டளை

இவர் வாங்கும் சம்பளத்திலிருந்து சில பகுதிகளை அறக்கட்டளைக்கு நன்கொடையாக கொடுத்து விடுகிறார். சென்னையில் இருக்கக்கூடிய அரசு சாரா அமைப்பாக நடந்து வரும் ரஜினிகாந்தின் அறக்கட்டளை மூலம் பல நன்மைகள் செய்யப்படுகின்றன.

2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மக்கள் சேவை அறக்கட்டளை பொது மக்களுக்கு மருத்துவ வசதியை செய்து வருகிறது. மேலும் பள்ளி குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பள்ளிகளுக்கு தேவையான குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை செய்து வருகிறது. மேலும் தனது அறக்கட்டளையின் மூலம் மிகப்பெரிய பிரமாண்ட மருத்துவ மனை ஒன்றை கட்டி வருவதாக கூறப்படுகிறது.

சென்னையின் புறநகரில் மிகப்பெரிய அளவில் பன்னிரண்டு ஏக்கர் நிலத்தில் மிகப்பெரிய மருத்துவமனை கட்டப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மருத்துவமனை 150 கோடி செலவில் கட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்திடம் தற்போது 430 கோடி ரூபாய் சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சொகுசு பங்களா மற்றும் ஆடம்பர கார்கள் இவரிடம் உள்ளன. இதன் மதிப்பு 35 கோடி ரூபாய் ஆகும். இவர் வைத்திருக்கும் ராகவேந்திரா திருமண மண்டபத்தின் மதிப்பானது 20 கோடி ரூபாய் எனும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் சொகுசு கார்கள்

நடிகர் ரஜினிகாந்திடம் இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் காரர்கள் உள்ளன. ஒன்று ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் இதன் விலை ஆறு கோடி ரூபாய் என்றும், மற்றொரு கார் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் இதன் மதிப்பு 16.5 கோடி ரூபாய் என தகவல்கள் கூறுகின்றன.

இது மட்டுமல்லாமல் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 மாடல் கார் வைத்துள்ளார் இது 1.77 கோடி ரூபாய் ஆகும். இது மட்டும் அல்லாமல் லம்போர்கினி உருஸ் என்ற காரும், பென்ஸ் ஜி வேகம் என்ற காரும் வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பென்ட்லி என்ற 6 கோடி மதிப்பு கொண்ட காரும் வைத்துள்ளார்.

தற்போது நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்த வருகிறார். 2025 ஆம் ஆண்டு வெளியாகும் இந்த திரைப்படத்தில் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.