பிரேக்அப் தந்த வலி..மன உளைச்சல்..சொந்த காதல் கதையை வெளிப்படையாக பேசிய ராஷி கண்ணா! என்ன நடந்தது?
சொந்த காதல் கதையை வெளிப்படையாக பேசிய ராஷி கண்ணா, பிரேக்அப் தந்த வலி மற்றும் மன உளைச்சல் பற்றியும் தெரிவித்துள்ளார். முதல் முறையாக் ஸ்டார் அந்தஸ்தை பெற்ற அந்த தருணத்தின் பற்றியும் பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.

பொதுவாக ஹீரோயின்கள் தங்கள் காதல் மற்றும் பிரேக்அப் பற்றி வெளிப்படையாக பேச விரும்ப மாட்டார்கள். அப்படி சொல்வதால், மற்றவர்கள் இழிவாகப் பார்க்கலாம் அல்லது வாய்ப்புகள் குறைந்துவிடும் என்று அச்சம் காரணமாக டாப் நடிகைகள் கூட அதை பற்றி பேசுவதை தவிர்த்துவிடுவார்கள். ஆனால் தற்போது தெலுங்கு, தமிழ் சினிமாக்களில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வரும் ராஷி கண்ணா தனது காதல் கதையை பற்றி மட்டும் வெளிப்படையாக பேசியதோடு, பிரேக்அப் குறித்தும் வெளிப்படுத்தியுள்ளார்.
டெல்லியை சேர்ந்த நடிகை ராஷி கண்ணா தெலுங்கு சினிமாக்களில் டாப் ஹீரோயினாக இருந்து வரும் நிலையில், தமிழிலும் வரிசை கட்டி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். இதையடுத்து ராஷி கண்ணா நடித்திருக்கும் புதிய படமான தி சபர்மதி ரிப்போர்ட் இன்று வெளியாகிறது. இந்த படத்தின் புரொமோஷனின் ஒரு பகுதியாக பிரபல ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தனது காதல் வாழ்க்கை மற்றும் பிரேக்அப் பற்றி மனம் திறந்துள்ளார்.
பிரேக்அப்புக்கு பின் ஏற்பட்ட மனஉளைச்சல்
அதில், "எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நான் மிகவும் உணர்ச்சிவசப்படும் நபராக உள்ளேன். எனது வாழ்க்கையிலும் ஒரு காதல் கதை இருக்கிறது. சில காரணங்களால் அந்த நபரை பிரிந்துவிட்டேன்.