Mayilsamy: அன்றே திருப்பதி லட்டை வைத்து சம்பவம் செய்த மயில்சாமி.. மிமிக்ரி முதல் செய்த கொடை வரை மயில்சாமியின் செய்கைகள்
Mayilsamy: அன்றே திருப்பதி லட்டை வைத்து சம்பவம் செய்த மயில்சாமி.. மிமிக்ரி முதல் செய்த கொடை வரை மயில்சாமியின் செய்கைகள் குறித்து அவரது பிறந்த நாளான இன்று பார்ப்போம்.

Mayilsamy: தமிழ் சினிமாவில் மற்றவருக்கு கொடுத்து கொடுத்து சிவந்த கைகள், மிகச் சிலரே. அந்த சிலரில் முக்கியமானவர் என்றால் நகைச்சுவை நடிகர் மயில்சாமியினை சொல்லலாம். அந்தளவுக்கு உதவி என்று கேட்டு வருபவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளை செய்தும், பிறரிடம் பேசி பெற்றுத்தந்தும் உள்ளார். அடிப்படையில் எம்.ஜி.ஆர் ரசிகரான மயில்சாமி, அவரது கொடைத் தன்மையால் ஈர்க்கப்பட்டு, தானும் பலருக்கு உதவ வேண்டும் என தன் வாழ்நாள் இறுதிவரை அவ்வாறு வாழ்ந்தவர். அத்தகைய உன்னதக் கலைஞரான நடிகர் மயில்சாமியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரைப்பற்றி அறிந்துகொள்ள நம்மிடம் ஏராளமான விஷயங்கள் உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.
யார் இந்த மயில்சாமி?:
நடிகர் மயில்சாமி அன்றைய பிரிக்கப்படாத கோவை மாவட்டத்தின் சத்தியமங்கலம் பகுதியில் 1965ஆம் ஆண்டு, இதே தேதியில்(அக்டோபர் 2) பிறந்தவர். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் 1977-ல் சென்னைக்கு வந்த அவர் நடிகர் பாக்யராஜிடம் தன் மிமிக்ரி திறமையைக் காட்டி, அவரது இயக்கத்தில் உருவான ’’தாவணிக் கனவுகள்’’ திரைப்படத்தில் ஒரு துணை நடிகராக அறிமுகமானார்.
அதன்பின் நடிகர் பிரபு, ரேவதி ஆகியோர் நடித்த கன்னி ராசி திரைப்படத்தில் கவுண்டமணியுடன் சேர்ந்து காமெடி செய்தார், நடிகர் மயில்சாமி.