சும்மாவே பெரிய பஞ்சாயத்து நடக்கும்.. அன்ஷிதாவை பிக் பாஸ் கூப்பிட இது தான் காரணமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சும்மாவே பெரிய பஞ்சாயத்து நடக்கும்.. அன்ஷிதாவை பிக் பாஸ் கூப்பிட இது தான் காரணமா?

சும்மாவே பெரிய பஞ்சாயத்து நடக்கும்.. அன்ஷிதாவை பிக் பாஸ் கூப்பிட இது தான் காரணமா?

Aarthi Balaji HT Tamil
Published Oct 06, 2024 11:08 PM IST

நடிகை அன்ஷிதா, பிக் பாஸ் சீசன் 8 வீட்டிற்குள் நுழைந்து உள்ளார். அவர் குறித்த தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

சும்மாவே பெரிய பஞ்சாயத்து நடக்கும்.. அன்ஷிதாவை பிக் பாஸ் கூப்பிட இது தான் காரணமா?
சும்மாவே பெரிய பஞ்சாயத்து நடக்கும்.. அன்ஷிதாவை பிக் பாஸ் கூப்பிட இது தான் காரணமா?

பெரிய பிளானில் பிக் பாஸ்

இந்த முறை வீட்டிற்குள் இரண்டு கோடுகள் இருக்கிறது. அதனால் பெரிய பிளான் இதில் பிக் பாஸ் வைத்து இருக்கிறார். மேலும் வழக்கம் போல் இல்லாமல் இந்த முறை படுக்கை அறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இரண்டு படுக்கை அறை இருக்கிறது. ஒன்றில் ஷேரிங் படுக்கையும் மற்றொன்றில் இரண்டு பேர் படுத்து உறங்குவது போல் அமைக்கப்பட்டு உள்ளது.

எதிர் வீட்டில் சின்ன குளியலறை, சேர் மட்டுமே கொண்ட டைனிங் டேபிள் இருக்கின்றனர். இதனால் கடந்த சீசனை போல இந்த முறையும் இரண்டு வீடு கான்செப்ட்டில் தான் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். 15 ஆவது போட்டியாளராக அன்ஷிதா, பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து உள்ளார்.

யார் இந்த அன்ஷிதா

கேரளா மாநிலத்தை சேர்ந்தவர், அன்ஷிதா. இவர் செல்லம்மா சீரியலில் நடித்தது மூலமாக பிரபலமானார். அதில் அவருடன் அர்னவ் என்பவர் நாயகனாக நடித்து இருந்தார். கடைசியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அன்ஷிதா கலந்து கொண்டார்.

அன்ஷிதா, அர்னவ் திருமணம் செய்து கொள்வதாகக் கூறப்படும் புகைப்படம் இணையத்தில் வெளியானது. இருப்பினும், இது உண்மையான திருமணம் அல்ல, மாறாக செல்லம்மா சீரியலுக்காக படமாக்கப்பட்ட காட்சி என தெரிந்தது.

தொடருமா காதல்?

முன்னதாக அர்னவ், திவ்யா ஸ்ரீதர் திருமணம் செய்து கொண்டனர். கர்ப்ப காலத்தில், திவ்யா, அர்னவ் மீது குறிப்பிடத்தக்க குற்றச்சாட்டுகளை கூறினார். சீரியலில் அவருடன் நடித்த அன்ஷிதா மீது காதல் வயப்பட்ட காரணத்தினால் தன்னை விட்டு அர்னவ் பிரிந்து சென்றதாக திவ்யா ஸ்ரீதர் குற்றம் சாட்டினார்.

இதனிடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக அன்ஷிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியீட்டு இருந்தார். அதில், "எங்கள் பந்தத்தின் அடித்தளத்தை எந்தப் புயலும் அசைக்க முடியாது." என குறிப்பிட்டு இருந்தார். அவர் அர்னவ் என்று குறிப்பிடவில்லை என்றாலும் அந்த கை அவரின் கை என நெட்டிசன்கள் கண்டு பிடித்தனர். மேலும் அன்ஷிதா மட்டும் இல்லாமல் அவருடன் இணைந்து அடுத்த போட்டியாளராக அர்னவ் களமிறங்கி உள்ளார்.

காதல் சப்ஜெக்ட்

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே காதல் சப்ஜெக்ட் என்பது இருக்கும். இந்த முறை மட்டும் என்ன விதி விலக்கா? நேரடியாக ஏற்கனவே பஞ்சாயத்தில் இருக்கும் அர்னவ், அன்ஷிதாவையே களத்தில் இறக்கி உள்ளார்கள். இதனால் டிஆர்பிக்கு குறைவு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்களிடம் இயல்பாக கலந்து கொள்வார்களா அல்லது ஜோடியாக சுற்றுவார்களா? என்பதை இன்று முதல் பொறுமையாக காணலாம்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.