Kamal Hassan Voice Out: 'நமது பேட்டரியைப் பிடுங்க முயற்சி.. எறிந்தால் என்ன.. ரிமோட் நம்மது’ - சீறிய கமல்ஹாசன்!
Kamal Hassan Voice Out: டிவியை உடைத்து விளம்பரம் செய்து பரப்புரை செய்தமை குறித்து நடிகர் கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார்.

Kamal Hassan Voice Out: திமுகவை விமர்சித்து ரிமோட்டை தூக்கிப்போட்டு டிவியை உடைத்துவிட்டு இப்போது கூட்டணியா என கேட்கிறார்கள் எனவும்; நமது டிவி, நமது ரிமோட் என்றும்; அது இங்கு தான் இருக்கும் எனவும்; எப்போது வேண்டுமானாலும் உடைத்துக் கொள்ளலாம் எனவும்; டிவிக்கான கரண்ட், ரிமோட்டுக்கான பேட்டரியை எடுக்க நினைப்பவர்களிடம் இருந்து அதனைக் காப்பாற்றவேண்டும் எனவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
திமுக கூட்டணிக்கு ஆதரவளித்தது ஏன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுடன்பேசிய கமல்ஹாசன் கூறுகையில், ‘’நமது வாதத்தை சந்தர்ப்பத்துக்கு ஏற்றமாதிரியெல்லாம் மாற்றமுடியாது. அப்படின்னா ரிமோட் எடுத்து அடிச்சவர் தானே அங்கே போறீங்க. அப்படின்னு சொன்னாங்க. ஐயா ரிமோட் இன்னும் என் கையில் தான் இருக்கு. டிவியும் அங்கேயா தான் இருக்கு. ஏனென்றால், அது நம்ம வீட்டு ரிமோட், நம்ம வீட்டு டிவி. ஆனால், டிவிக்கான கரண்ட்டையும், ரிமோட்டுக்கான பேட்டரியையும் உருவப் பார்க்கும் சக்தி ஒன்றியத்தில் உருவாகிக் கொண்டு இருக்கிறது. இதை நான் இனிமேல் எறிந்தால் என்ன?; வைத்திருந்தால் என்ன?; அந்த மாதிரி செய்கைகளுக்கு இனிமேல் அர்த்தமே இல்லாமல் போய்விடும்.