Kamal Haasan on Ilaiyaraaja: ‘ராஜாவை பிடிக்காதவர்கள் படம் எடுத்தால் கூட.. இது இளையராஜா படம் அல்ல - கமல்ஹாசன்!
ஒருமுறை நான் இளையராஜாவின் இசையில் பாடும் பொழுது சன்னியாச மந்திரம் பாட வேண்டிய சூழ்நிலை வந்தது. அப்போது நான் எஸ்பிபி உள்ளிட்ட பெரிய பாடகர்கள் போல பாட முயற்சித்தேன்.அவர் உடனே அவரைப்போன்று, இவரைப்போன்று எல்லாம் பாட முயற்சி செய்யாதீர்கள். நீங்கள் பாடுங்கள். அதுவாக வரும் என்றார். - கமல்ஹாசன்!
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை கதை, இளையராஜா என்ற பெயரில் படமாக உருவாகிறது. இந்தப்படத்தில் நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன், “ஒரு இயக்குநருக்கும் திரைக்கதை ஆசிரியருக்கும் இடையே ஆரம்பத்தில் ஏற்படும் குழப்பங்கள் எனக்கும் ஏற்பட்டு இருக்கிறது. எங்கே இருந்து ஆரம்பிப்பது என்று எனக்கு தெரியவில்லை.. நாங்கள் சந்தித்துக் கொண்டதை பற்றி சொல்லி ஆரம்பிப்பதா.. அல்ல… நாங்கள் முதன்முறையாக சந்தித்துக்கொண்டது பற்றி சொல்லி ஆரம்பிப்பதா…?
எனக்கு முதலில் அவரைதெரியாது. பாவலர் அவர்களின் சகோதரர்கள் என்பது மட்டும் தெரியும். முதலில் அமர் தான் இளையராஜா என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதன் பின்னர் சார் நான் உங்களுடைய ரசிகன் என்று சொல்லி பேச ஆரம்பித்து, அது சிறிது நாளில் அண்ணன் என்றாகி, அதன் பின்னர் ஐயா என்றானது.
இப்போது எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் குணாவுக்கும் அபிராமிக்கும் அவர் காதல் பாட்டு போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று.. அது உண்மை அல்ல.. அது எங்களுடைய காதல் பாட்டு.. அது என் கண்மணிக்கு நான் எழுதிய கடிதம். அதற்கு இளையராஜா இசை அமைத்து விட்டார்.
ஒருமுறை நான் இளையராஜாவின் இசையில் பாடும் பொழுது சன்னியாச மந்திரம் பாட வேண்டிய சூழ்நிலை வந்தது. அப்போது நான் எஸ்பிபி உள்ளிட்ட பெரிய பாடகர்கள் போல பாட முயற்சித்தேன்.
அவர் உடனே அவரைப்போன்று, இவரைப்போன்று எல்லாம் பாட முயற்சி செய்யாதீர்கள். நீங்கள் பாடுங்கள். அதுவாக வரும் என்றார். அது எனக்கு இசையில் ஒரு மிகப்பெரிய பாடமாக அமைந்தது.
இளையராஜாவின் வாழ்க்கையை எடுக்க வேண்டும் என்றால் அதனை 8 பாகங்களாக எடுக்கலாம். ராஜாவை பிடிக்காதவர்கள் எடுத்தால், அதுவே தனி படமாக வரும். ஆனால் எப்படி எடுத்தாலும் அந்த இசை மேதையானவர் தனித்தே நிற்பார். இதனை பிடிக்காதவர்கள் சொன்னால் கூட, அதை அவர்களால் மறுக்க முடியாது.
அவர் ஆறடி எல்லாம் கிடையாது என்று ஆரம்பிப்பார்கள். ஆமாம் அவர் ஆறடி கிடையாது தான். ஆனால் பாட்டு கேட்டால் ஒரு அடி போதும். எனக்கு அவர் மீது பொறாமையே கிடையாது. காரணம் என்னவென்றால் அவர் செய்வதை எல்லாம் நான் செய்வது போன்றே நினைத்துக் கொள்கிறேன்.
நான் இவர் வாழ்ந்த காலத்தில் பிறக்கவே இல்லை என்று சூழ்நிலை அமைந்து இருந்தாலும், நூறு வருடங்கள் கழித்து பிறந்து இருந்தாலும், அவர் வாழும் காலத்தில் தான் வாழ்ந்திருப்பேன் காரணம் இசையானது அப்போதும் இருக்கும்.
நான் இயக்குநருக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். இளையராஜா படத்தை உங்களுடைய பார்வையில், உங்களுக்கு எதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை, அந்த நிஜத்தை சொல்லுங்கள்.. படம் குறித்தான அழுத்தத்தை எடுத்துக் கொள்ளவே செய்யாதீர்கள். காரணம் இந்த படம் இசைஞானி இளையராஜாவை பற்றிய படம் அல்ல.. பாரத ரத்னா இளையராஜாவின் படம். இது வாழ்த்து இல்லை.. வேண்டுகோள் " என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்