தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Vijayakanth Starrer Auto Raja Movie Completed 42 Years Of Its Release

42 Years of Auto Raja: ரஜினிக்கு முன்னரே ஆட்டோகாரன் வேடத்தில் கலக்கிய விஜயகாந்த்! பிளாப் ஆனாலும் சிறந்த ஜனரஞ்சக படம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 27, 2024 05:30 AM IST

ரஜினிக்கு முன்னரே ஆட்டோகாரன் வேடத்தில் விஜயகாந்த் தோன்றி நடிப்பில் கலக்கிய படம் ஆட்டோ ராஜா. படம் பிளாப் ஆகியிருந்தாலும் ஜனரஞ்சக அம்சங்களுடன், விஜயகாந்த் நடிப்புக்காக பார்த்து ரசிக்ககூடிய படமாக அமைந்திருக்கும்.

விஜயகாந்த் நடித்த ஆட்டோ ராஜா திரைப்பட காட்சிகள்
விஜயகாந்த் நடித்த ஆட்டோ ராஜா திரைப்பட காட்சிகள்

ட்ரெண்டிங் செய்திகள்

படத்தின் ஹீரோவாக வரும் விஜயகாந்த் ஆட்டோகரராகவே நடித்திருப்பார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாட்ஷா படத்தில் ஆட்டோகாரர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதன்பின்னர் ஆட்டோகாரர்கள் மீதான மரியாதை பொதுமக்களிடையை சற்று அதிகரித்தது என்றே கூறலாம்.

ஆனால் ரஜினிக்கு முன்னரே ஆட்டோகாரர் கதாபாத்திரத்தில் நேர்மையான நடித்திருக்கும் விஜயகாந்த், நடிப்பிலும் கலக்கியிருப்பார்.

கமர்ஷியல் படம்

காதல், காமெடி, ஆக்‌ஷன் கலந்த சிறந்த ஜனரஞ்சக படமாக ஆட்டோ ராஜா அமைந்திருக்கும். படத்தில் ஜெய்சங்கர், சங்கிலி முருகன், தேங்காய் சீனிவாசன், வி.கே. ராமசாமி உள்பட பலரும் நடித்திருப்பார்கள். 1980களில் ரீமேக் இயக்குநராக இருந்து வந்த கே. விஜயன் படத்தை இயக்கியிருப்பார்.

ஆட்டோ ராஜா கன்னட பதிப்பில் நடித்த காயத்ரி, தமிழிலும் ஹீரோயினாக நடித்திருப்பார். விஜயகாந்த் - காயத்ரி இடையிலான மோதல், அதன் பின்னர் காதல், விஜயகாந்த் - ஜெய்சங்கர் இணைந்து நியாத்துக்காக குரல் கொடுப்பது, வில்லனான சங்கிலி முருகனை எதிர்ப்பது படத்தின் திரைக்கதையாக அமைக்கப்பட்டிருக்கும்.

எந்த இடத்தில் போர் அடிக்காத விதமாக சுவாரஸ்ய காட்சிகளுடன், விஜயகாந்த் அற்புதமான நடிப்புடன் படத்தின் ஓட்டமானது இருக்கும். குறிப்பாக விஜய்காந்த் - ஜெய்சங்கர் நட்பு தொடர்பான காட்சிகள் ரசிக்கும் விதமாக இருக்கும். அதேபோல் தேங்காய் சீனிவாசன் நடிப்பும் வெகுவாக பேசப்பட்டது.

கிளாசிக் மெலடி பாடல்

படத்துக்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருப்பார். சங்கத்தில் பாடாத கவிதை என்கிற பாடலை மட்டும் சங்கர் கணேஷ் அன்புடன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நட்புக்காக இளையராஜா இசையமைத்து ஜானகியம்மாவுடன் இணைந்து பாடியும் கொடுத்தார். இந்த பாடல் சிறந்த மெலடி பாடாக இன்று வரையிலும் ஒளித்துக்கொண்டிருக்கிறது.

5 தொடர் பிளாப்புகள்

ஆட்டோ ராஜா படத்துடன் சேர்ந்து விஜயகாந்துக்கு தொடர்ச்சியாக 5 படங்கள் பிளாப் ஆகியுள்ளது. ஆட்டோ ராஜா வெளியான ஆண்டில் விஜயகாந்த் நடிப்பில் பார்வையின் மறுபக்கம், பட்டணத்து ராஜாக்கள், சிவந்த கண்கள், ஓம் சக்தி, சட்டம் சிரிக்கிறது ஆகிய படங்கள் வெளியாகின. இதன் அவரது சினிமா வாழ்க்கையில் சிறிய பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும் இந்த படங்களில் விஜயகாந்தின் நடிப்புக்கு தனிப்பட்ட முறையில் பாராட்டுகளும் கிடைத்தன.

இதன் பின்னர் 1983இல் வெளியான சாட்சி படத்தில் தான் கம்பேக் கொடுத்தார் விஜயகாந்த். 

1982ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட ஆட்டோ ராஜா படம் சுமார் இரண்டு மாதங்கள் தள்ளி மார்ச் 27ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற பாக்ஸ் ஆபிஸ் வசூலையும் குவித்த இந்த படம் விஜயகாந்த் சினிமா வாழ்க்கையில் சிறந்த கமர்ஷியல் ஹிட் படங்களில் ஒன்றாக உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்