விஜய் சார் பெரியாரை தூக்கி பிடிக்கக்கூடாது.. சீமான் அப்படி பேசியிருக்கக் கூடாது.. இயக்குநர் பேரரசு அதிரடி
விஜய் சார் பெரியாரை தூக்கி பிடிக்கக்கூடாது.. சீமான் அப்படி பேசியிருக்கக் கூடாது.. இயக்குநர் பேரரசு அதிரடியாகப் பேசியுள்ளார்.

விஜய் சார் பெரியாரை தூக்கி பிடிக்கக்கூடாது.. சீமான் அப்படி பேசியிருக்கக் கூடாது.. இயக்குநர் பேரரசு அதிரடி
விஜய் சார் பெரியாரை தூக்கிப் பிடிக்கக்கூடாது என்றும்; விஜய் சார் மக்கள் மனதில் இடம்பிடிக்கப் பார்க்கவேண்டும் என அவருடன் பணியாற்றிய இயக்குநர் பேரரசு கூறியுள்ளார்.
திருப்பாச்சி, சிவகாசி படங்களில் நடிகர் விஜயை இயக்கிய இயக்குநர் பேரரசு கலாட்டா வாய்ஸ் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நடிகர் விஜய்யின் அரசியல் குறித்து கூறியிருப்பதாவது, ‘’ சீமான் பல ஆண்டுகாலமாக அரசியலில் இருக்கிறார். விஜய் சாரை அப்படி பேசியிருக்கக் கூடாது. திமுகவில் தான் அப்படி மூன்றாம் கட்ட பேச்சாளர்கள் இருப்பாங்க,
தீப்பொறி ஆறுமுகம் மாதிரி. வருவதற்கு முன்பு விஜய் சாரை ஆதரிப்பேன்னு சொல்லிட்டு வந்தபின் ப்ரோன்னு கிண்டல் பண்ணக்கூடாது. இது உங்களுக்கும் தான் பலவீனம். ஒரு கட்சித் தலைவர் ஆக இருக்கும்போது, இப்படி பேசியிருக்கக் கூடாது.