ரஜினிகாந்தின் வேட்டையன், சமந்தாவின் கம்பேக்..விஜய் 69! நவம்பர் மாதம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஓடிடி ரிலீஸ்கள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ரஜினிகாந்தின் வேட்டையன், சமந்தாவின் கம்பேக்..விஜய் 69! நவம்பர் மாதம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஓடிடி ரிலீஸ்கள்

ரஜினிகாந்தின் வேட்டையன், சமந்தாவின் கம்பேக்..விஜய் 69! நவம்பர் மாதம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஓடிடி ரிலீஸ்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 04, 2024 01:00 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன், சமந்தாவின் கம்பேக் ஆக சிட்டாடல், ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா: பார்ட் 1, விஜய் 69 போன்ற படங்கள் நவம்பர் மாதம் ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கிறது.

ரஜினிகாந்தின் வேட்டையன், சமந்தாவின் கம்பேக்..விஜய் 69! நவம்பர் மாதம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஓடிடி ரிலீஸ்கள்
ரஜினிகாந்தின் வேட்டையன், சமந்தாவின் கம்பேக்..விஜய் 69! நவம்பர் மாதம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஓடிடி ரிலீஸ்கள்

வேட்டையன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தசரா வெளியீடாக கடந்த மாதம் 10ஆம் தேதி ரிலீஸான வேட்டையன் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. பாக்ஸ் ஆபிஸில் ரூ. 300 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியிருப்பதாக கூறப்படுகிறது. த.செ.ஞானவேல்ராஜா இயக்கியிருக்கும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் பசில், ராணா டகுபதி, மஞ்சுவாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி உள்பட பலரும் நடித்திருக்கும் இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நவம்பர் 8ஆம் தேதி ஸ்டிரீமிங் ஆக இருக்கிறது. தமிழ் தவிர தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் படம் வெளியாகிறது.

சிட்டாடல்: ஹனி பன்னி

மயோசிடிஸ் நோய் பாதிப்பு காரணமாக சினிமாவுக்கு குட்டி பிரேக் எடுத்து கொண்ட பிறகு, சமந்தாவின் கம்பேக் ஆக அமைந்திருக்கும் இந்த வெப் சீரிஸ் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நவம்பர் 7ஆம் தேதி முதல் ஸ்டிரீமிங் ஆகிறது. பிரியங்கா சோப்ரா - ரிச்சட்டு மேடன் நடித்த ஹாலிவுட் ஸ்பை திர்ல்லர் வெப் சீரிஸான சிட்டாடல் இந்திய பதிப்பாக உருவாகியிருக்கும் சிட்டாடல்: ஹனி பன்னி சீரிஸில் பாலிவுட் நடிகர் வருண் தவான், சமந்தா ஆகியோர் இணைந்து ஆக்‌ஷன் அவதாரத்தில், ரொமன்ஸிலும் கலக்கியுள்ளனர். இந்தியில் உருவாகியிருக்கும் இந்த சீரிஸ் சமந்தாவுக்கு பாலிவுட் என்ட்ரியாக அமைந்துள்ளது. இதில் கேகே மேனன், சிம்ரன், சிகந்தர் கெர், சோகம் மஜும்தார் உள்பட பலரும் நடித்துள்ளனர். இந்தியில் உருவாகியிருந்தாலும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவரா: பார்ட் 1

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர், பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்து ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக வெளிவந்த ரசிகர்களை கவர்ந்த படம் தேவரா: பார்ட் 1. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்களை கவர்ந்ததுடன் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 400 கோடிக்கு மேல் வசூலித்தது. கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி வெளியான இந்த படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நவம்பர் 8ஆம் தேதி ரிலீஸாகிறது.

விஜய் 69

பாலிவுட் நடிகர் அனுபம் கேர் நடித்திருக்கும் விஜய் 69 படம், 69 வயதாகும் பெரியவர் ட்ரை அதலான் போட்டியில் பங்கேற்க முடிவு செய்கிறார். அவரை பற்றி ஊக்கத்தையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்தும் கதையாக இந்த படம் உள்ளது. இந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் நவம்பர் 8ஆம் தேதி ரிலீசாகிறது.

எமிலியா பெரெஸ்

செலினா கோம்ஸ் நடித்த எமிலியா பெரெஸ் ஒரு பிரெஞ்சு க்ரைம் காமெடி படமாக உள்ளது. ஜோ சல்டானா, அட்ரியானா பாஸ், கார்லா சோபியா காஸ்கான், எட்கர் ராமிரெஸ் மற்றும் மார்க் இவானிர் உள்பட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் ஒரு வழக்கறிஞரைப் பின்தொடர்கிறது.

குற்றவாளிகளை நீதிக்கு கொண்டு வருவதை விட சிறையில் இருந்து வெளியே வருவதில் அதிக ஆர்வம் கொண்ட ஒரு பெரிய சட்ட நிறுவனத்தில் பணிபுரியும் குறைத்து மதிப்பிடப்பட்ட வழக்கறிஞர் ரீட்டா (ஜோ சல்தானா), ஒரு குற்றவியல் அமைப்பின் தலைவரால் பணியமர்த்தப்படுகிறார். அதன் பின்னர் நடக்கும் விறுவிறுப்பான திருப்பங்கள் தான் படத்தின் கதை. இந்த படம் நெட்பிளிக்ஸில் நவம்பர் 13ஆம் தேதி ரிலீசாகிறது.

சென்னா

இந்த ஆவணப்படம் 30 ஆண்டுகளுக்கு முன்பு பந்தய விபத்தில் இறந்த பிரேசிலியன் ஃபார்முலா 1 டிரைவரான அயர்டன் சென்னாவை அடிப்படையாகக் கொண்டது. ஃபார்முலா 1 ஓட்டுநரின் வெற்றிகள், ஏமாற்றங்கள், மகிழ்ச்சிகள் மற்றும் துக்கங்களின் பயணத்தை கதைக்களம் ஆராய்கிறது.

மூன்று முறை ஃபார்முலா 1 சாம்பியனான அயர்டன் சென்னாவின் பந்தய வாழ்க்கையின் தொடக்கத்துடன் ஆறு அத்தியாயங்கள் கொண்ட தொடர் தொடங்குகிறது. இத்தாலியில் நடந்த சான் மரினோ கிராண்ட் பிரிக்ஸ் நிகழ்வின் போது, ​​அயர்டன் சென்னா மரண விபத்தை சந்திக்கிறார்.எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த சீரிஸ் நெட்பிளிக்ஸில் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகிறது.

இந்த படங்கள் தவிர அக்டோபரில் வெளியான பல படங்களும் தீபாவளி ஸ்பெஷலாக தற்போது ஓடிடிகளில் வெளியாகி இருக்கின்றன.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.