Vijay Politics: ’கீழே விழுந்த மாலை கழுத்தில் போட்டுக் கொண்ட விஜய்!’ கட்சி தொடங்கிய பின் முதல் சம்பவம்!
”கோட் திரைப்படத்தின் படப்படிப்பானது புதுச்சேரியில் உள்ள ஏஏடி திடலில் நடந்துவந்தது. இந்த படப்பிடிப்பு குறித்த தகவல்கள் பரவியதல் ஏராளமான பொதுமக்களும், ரசிகர்களும் புதுச்சேரி- கடலூர் சாலையில் குவிந்தனர்”

கட்சி தொடங்கிய பிறகு புதுச்சேரியில் முதன் முறையாக மக்களை சந்தித்த நடிகர் விஜய்
புதிய அரசியல் கட்சியை தொடங்கிய பின்னர் முதன் முறையாக நடிகர் விஜய் மக்களையும், ரசிகர்களையும் சந்தித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி உள்ளது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று முன் தினம் (02-02-2024) அன்று நடிகர் விஜய் அறிவித்தார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘“விஜய் மக்கள் இயக்கம்" பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே.
இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர, ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.