தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay Fan: ‘விஜய் அண்ணா..’ பாசமாக அழைத்த ரசிகை.. சற்றும் கண்டுகொள்ளாமல் சென்ற விஜய்!

Vijay Fan: ‘விஜய் அண்ணா..’ பாசமாக அழைத்த ரசிகை.. சற்றும் கண்டுகொள்ளாமல் சென்ற விஜய்!

Aarthi Balaji HT Tamil
May 11, 2024 10:20 AM IST

Vijay Fan: தி கோட் படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் இன்று ( மே 11) விமானம் மூலம் ரஷ்யா நாட்டிற்கு சென்று இருக்கிறார். அவரை அடையாளம் கண்ட பெண் ரசிகை விஜய் அண்ணா.. விஜய் அண்ணா என மகிழ்ச்சியில் அழைத்து கொண்டே இருந்தார்.

பாசமாக அழைத்த ரசிகை.. சற்றும் கண்டுகொள்ளாமல் சென்ற விஜய்!
பாசமாக அழைத்த ரசிகை.. சற்றும் கண்டுகொள்ளாமல் சென்ற விஜய்!

ட்ரெண்டிங் செய்திகள்

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பேனரில் அர்ச்சனா கல்பாத்தி, கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் தமிழுடன் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ஒரே தேதியில் வெளியாக உள்ளது.

லியோவுடன் விஜய் கடைசியாக ‘லியோ’ படத்தின் மூலம் ரசிகர்களை வரவேற்றார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த ஆக்‌ஷன் எண்டர்டெய்னர் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.550 கோடி வசூல் செய்துள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மற்றும் ஆக்ஷன் ஸ்டார் அர்ஜுன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அரசியலில் விஜய்

விஜய் சமீபகாலமாக அரசியல் கட்சியை அறிவித்து படங்களில் இருந்து விலகி இருப்பது தெரிந்ததே. தற்போது கமிட் ஆன படங்களை முடித்துவிட்டு என்றென்றும் படங்களுக்கு குட்பை சொல்ல விஜய் முடிவு செய்து உள்ளார்.

தற்போது கமிட் ஆன படங்களை முடித்துவிட்டு என்றென்றும் படங்களுக்கு குட்பை சொல்ல விஜய் முடிவு செய்து உள்ளார். இதனால் விஜய் அரசியலுக்கு வருவதில் மகிழ்ச்சி அடைவதா அல்லது சினிமாவில் இருந்து விலகிப் போகிறார் என்ற வருத்தமா என்று தெரியவில்லை.

விஜய்க்கு தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இவரது படங்கள் கேரளாவில் வசூல் சாதனை படைக்கிறது. விஜய்க்கு மாலிவுட்டில் நேரடி ஹீரோக்களின் படங்களோடு போட்டி போடும் அளவுக்கு கிரேஸ் உள்ளது.

ரசிகையை கண்டுகொள்ளாமல் சென்ற விஜய்

இந்நிலையில் தி கோட் படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் இன்று ( மே 11)  விமானம் மூலம் ரஷ்யா நாட்டிற்கு சென்று இருக்கிறார். அவரை அடையாளம் கண்ட பெண் ரசிகை விஜய் அண்ணா.. விஜய் அண்ணா என மகிழ்ச்சியில் அழைத்து கொண்டே இருந்தார். ஆனால் விஜய் சற்றும் அவரை கண்டு கொள்ளாமல் போய்விட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது. 

தேர்தல்லில் ஜெயிக்கனும்

மேலும் அந்த பெண் பிரபல செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில் இது தொடர்பாக கூறுகையில், “ நான் விஜய் அண்ணா.. அண்ணானு கூப்பிட்டேன். ஆனால் அவர் திரும்பி பாக்காமலயே போயிட்டாரு. இருந்தாலும் பரவாயில்லை. அவர் தேர்தல்லில் ஜெயிக்கனும் CM ஆகனும். எங்க ஓட்டு அவருக்கு தான் ” என பேசினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்