பான் வேர்ல்டு ஆக்ஷன் ஹீரோ..தற்காப்பு கலைகளின் மன்னன்! அதிரடியால் உலகையே மிரட்டிய நாயகன் புரூஸ் லீ
பான் வேர்ல்டு ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்த புரூஸ் லீ, தனது அதிரடியால் உலகையே மிரட்டிய நாயகனாக இருந்துள்ளார். ஜூடோ, கராத்தே, குத்துசண்டை என பல தற்காப்பு கலைகளை கற்று தேர்ந்த மன்னனாக திகழ்ந்துள்ளார்.
ஹாங்காங்கை பூர்வீகமாக கொண்டு அமெரிக்காவில் பிறந்து, உலகம் முழுவதும் தனது அதிரடியால் சினிமா ரசிகர்களுக்கு பிரமிப்பூட்டியவர் தான் புரூஸ் லீ. ஏரளாமான நடிகர்களுக்கும், பிரபலங்களுக்கும் இன்ஸ்பிரேஷனாக திகழ்ந்த புருஸ் லீ அடிப்படையில் தற்காப்பு கலை கலைஞராக வாழ்க்கையை தொடங்கி0, நடிகராக மக்களை மகிழ்வித்துள்ளார்.
புரூஸ் லீ பிறப்பும் வளர்ப்பும்
புரூஸ் லீ என்று உலகம் முழுவதும் அறியப்பட்டாலும் இவரது ஒரிஜினல் பெயர் புரூஸ் லான்காஸ்டர். இவர் பிறந்த ஆண்டு சீன ஜோதிடத்தின்படி இவர் பிறந்த ஆண்டு மற்றும் நேரம் ஆகிய இரண்டும் டிராகன் ஆண்டு மற்றும் நேரமாக இருந்தது. இது சீன மரபுப்படி வலிமையான சகுனமாக பார்க்கப்படுகிறது.
புரூஸ் லீக்கு மூன்று வயதாக இருந்தபோது இவரது குடும்பம் ஹாங்காங்குக்கு இடம்பெயர்ந்தது. சிறுவயதிலிருந்தே, தற்காப்பு கலை, நடிப்பு, பாடுதல் மற்றும் நடனம் ஆகியவற்றில் இயல்பான திறனை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகளில் அபரிமிதமான ஆர்வத்தை வெளிப்படுத்தினார். அவரது திறமைகள் உள்ளூர் நாடக இயக்குநரின் கவனத்தை ஈர்த்தது.
முதல் தற்காப்பு கலை பள்ளி
தனது 18ஆவது வயதில் அமெரிக்க சென்ற புரூஸ் லீ உணவகம் ஒன்றில் பணியாற்றினார். 1961ஆம் ஆண்டில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நாடக கலைகள், தத்துவம், உளவியல் பாடங்களை பயின்ற அவர் தான் கற்ற குங்ஃபு கலையை அமெரிக்காவில் கற்பிக்கத் தொடங்கினார்.
தான் தங்கியிருந்த சீட்டிலில், தனது முதல் தற்காப்புக்கலை பள்ளியையும் தொடங்கினார். 1964ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவில் தனது இரண்டாவது பள்ளியை தொடங்கினார். அப்போதுதான் அவர், ஜீட் குனே டூ என்ற தனது சொந்த டெக்னிக்கை வளர்த்தெடுத்தார். அது பழைய குங்ஃபூ மற்றும் ஃபென்சிங், பாக்சிங் மற்றும் தத்துவம் ஆகியவற்றின் கலவையாக இருந்தது. பழமையான தற்காப்புக்கலைக்கு பதில் இந்த புதிய கலையை அவர் போதித்தார்.
கலைப்பயணம்
லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற கராத்தே போட்டியில் இவர் தனது குங்ஃபூ கலையை செய்து காட்டியதை பார்த்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர், தி கிரீன் ஹார்னெட் என்ற தொலைக்காட்சி தொடரில் நடிக்க வைத்தார்.
அந்த தொடர் ரத்து செய்யப்பட்டவுடன் அவருக்கு நடிப்பு வாய்ப்பு கிடைக்கவேயில்லை. இதையடுத்து அவர் ஹாலிவுட் நடிகர்களுக்கு ஜீட் குனே டூ கலையை கற்றுக்கொடுத்தார். அதன் மூலம் கிடைத்த வருவாயில் அவர் வாழ்ந்து வந்தார்.
இவரிடம் பயிற்சி பெற்றவர்களுக் ஸ்டீவ் மெக்குவீனும் ஒருவர். 1969ஆம் ஆண்டு மார்லோ படத்தில், ஒரு முழு அலுவலக அறையையே தனது கிக் பாக்சிங் மற்றும் கராத்தே திறமையால் அழிப்பார். அந்த காட்சிக்கு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அவருக்கு வேறு கதாபாத்திரங்கள் கிடைக்காததால், அவர் மீண்டும் ஹாங்காங் சென்றார். அங்கு அவர் இரண்டு படங்களில் நடித்தார். அந்தபடங்களில் ஆசியா முழுவதும் பெறும் வெற்றியை பெற்றது. பின்னர் அமெரிக்காவிலும் பல்வேறு படங்களில் நடித்து வெற்றி பெற்றார். பின்னர் அவரே படங்கள் எழுதி, தயாரித்து, இயக்கி, நடித்தார்.
தலைப்பு செய்தியாக வலம் வந்த புரூஸ் லீ
பல்துறை நடிகராக மாறிய புரூஸ் லீ ஏராளமான பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்தார். ஹாலிவுட் திரையுலகினரே வியப்பில் ஆழ்த்தும் அளவில் உலகம் பல்வேறு பகுதிகளில் தலைப்பு செய்தியாக இருந்தார்.
மிக குறுகிய காலகட்டத்தில் சினிமா, டிவி, டாக்குமென்டரி என 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அனைத்தும் ரசிகர்களால் கவரப்பட்டு கொண்டாடப்பட்டவையாக இருந்தன. ஜூடோ, கராத்தே, தற்காப்பு கலைகள் மற்றும் குத்துச்சண்டை, அத்துடன் திரைப்படம், தொலைக்காட்சி, காமிக்ஸ், அனிமேஷன் மற்றும் விடியோ கேம்கள் உள்ளிட்ட நவீன போர் விளையாட்டுகளில் செல்வாக்கு பெற்றவராக திகழ்ந்தார். இவரது வாழ்க்கை வரலாறு படம், டிராகன் தி புரூஸ் லீ ஸ்டோரி என்ற பெயரில் 1993ஆம் ஆண்டு வெளியானது.
இருபதாம் நூற்றாண்டின் உலக அளவில் மிக முக்கியமான 100 நபர்களில் ஒருவராகக் குறிப்பிட்ட புரூஸ் லீயின் பிறந்தநாள் இன்று.
டாபிக்ஸ்