Chinese Horoscope: அதிர்ஷ்டம்! ஆரவாரம்! காதல்! காமம் யாருக்கு! சீன ஜோதிடம் சொல்லும் ரகசியம்! வார ராசிபலன்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Chinese Horoscope: அதிர்ஷ்டம்! ஆரவாரம்! காதல்! காமம் யாருக்கு! சீன ஜோதிடம் சொல்லும் ரகசியம்! வார ராசிபலன்!

Chinese Horoscope: அதிர்ஷ்டம்! ஆரவாரம்! காதல்! காமம் யாருக்கு! சீன ஜோதிடம் சொல்லும் ரகசியம்! வார ராசிபலன்!

Kathiravan V HT Tamil
Oct 12, 2024 08:55 PM IST

அக்டோபர் 14-20, 2024 முதல் வாராந்திர சீன ஜாதகம்: உங்கள் ராசியின் அடிப்படையிலான சீனக் கணிப்புகள் இதோ.

Chinese Horoscope: அதிர்ஷ்டம்! ஆரவாரம்! காதல்! காமம் யாருக்கு! சீன ஜோதிடம் சொல்லும் ரகசியம்! வார ராசிபலன்!
Chinese Horoscope: அதிர்ஷ்டம்! ஆரவாரம்! காதல்! காமம் யாருக்கு! சீன ஜோதிடம் சொல்லும் ரகசியம்! வார ராசிபலன்! (Freepik)

எலி (1948, 1960, 1972, 1984, 1996, 2008, 2020)

இந்த வாரத்தில் ஆற்றலுடன் செயல்பட்டு உங்கள் வலிமையை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி குறையலாம். தனிப்பட்ட இலக்குகளில் மிக கவனமாக இருப்பது முக்கியம்.  சமூகத்தில் மரியாதை மற்றும் மதிப்பு கிடைக்கும். தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 

எருது (1949, 1961, 1973, 1985, 1997, 2009, 2021)

இந்த வாரம் ஆற்றல் மற்றும் அமைதியாகவும், சீரற்றதாகவும் தோன்றலாம். ஆனால் யோசனைகள் மற்றும் நுண்ணறிவுகள் வடிவம் பெறுகின்றன. இப்போதைக்கு பொறுமையே முக்கியம். காதலில், உங்கள் துணையுடன் நம்பிக்கையை வளர்ப்பதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் தொழில் சிறப்பாக இருக்கும். புதிதாக ஏதாவது உருவாகத் தொடங்கினால், பொறுமையாக செயல்படவும். 

புலி (1950, 1962, 1974, 1986, 1998, 2010, 2022)

இந்த வாரம் உங்கள் உள்ளுணர்வை கூர்மைப்படுத்தும். அன்பில், நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் வழிநடத்துங்கள். ஆனால் உங்களை யாரும் தவறாக நடத்தவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அன்பானவர்கள் மீது கோபம் கொள்ள வேண்டாம். உங்கள் சமூக வாழ்க்கை அமைதியாக இருக்கும். நண்பர்கள் உடன் நேரம் செலவிடுவீர்கள். நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள். 

முயல் (1951, 1963, 1975, 1987, 1999, 2011, 2023)

கடந்த வாரம் இருந்த பிரச்னைகள் இந்த வாரம் தீர்வு அடையும். பழைய நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். காதல் உறவுகளில் மிக கவனமாக இருங்கள்.  சமூக ரீதியாக, முன்னேறி பொறுப்புகளை ஏற்க வேண்டிய நேரம் இது. உங்கள் திட்டங்களை முறையாக திட்டி செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம்.

டிராகன் (1940, 1952, 1964, 1976, 1988, 2000, 2012, 2024)

இந்த வாரத்தின் ஆற்றல் நிறைந்ததாக இருக்கும். உங்கள் எதிர் காலத்திற்கான புதிய திட்டங்களை முன்னெடுப்பீர்கள். காதல் மற்றும் திருமணம் வாழ்கையில் மகிழ்ச்சி நிலைக்கும். பெற்றோர்கள் உங்கள் காதலுக்கு ஆதரவு கரம் நீட்டுவார்கள். பய உணர்வை கைவிட்டு நம்பிக்கையாக நகருங்கள்.  பிடித்தமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். 

பாம்பு (1941, 1953, 1965, 1977, 1989, 2001, 2013)

இந்த வாரம் அலுவலகம் மற்றும் வெளியிடங்களில் கவனமாக இருக்க வேண்டும். சில போலி நண்பர்களின் சுய ரூபத்தை அறிவீர்கள். இது உங்கள் காதல் வாழ்க்கையையும் பாதிக்கலாம், குறிப்பாக யாராவது உங்கள் உறவில் தலையிட முயற்சித்தால் அதற்கு முட்டுக்கட்டை போடவும். வியாபாரத்தில் துணிச்சலான முடிவுகள் பெரும் பலன்களை தரும். 

குதிரை (1942, 1954, 1966, 1978, 1990, 2002, 2014)

உங்கள் விதியைக் கட்டுப்படுத்தி உங்களுக்கான தனித்துவமான பாதையை உருவாக்குவதற்கான தருணம் இது. உங்களையும் உங்கள் திறன்களையும் நம்புங்கள், நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்கள் உள் நலனில் கவனம் செலுத்துங்கள். இலக்குகளில் கவனமாக இருந்து காரியங்களை சாதிப்பீர்கள். வாழ்கை துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.  உங்கள் தொழிலைப் பொறுத்தவரை, நீண்ட காலமாக எடுக்க வேண்டிய முடிவுகளை எடுப்பீர்கள்.  

ஆடு (1943, 1955, 1967, 1979, 1991, 2003, 2015)

உங்களை நிலைநிறுத்தி, உங்கள் ஆழ்மனதை இன்னும் தெளிவாகப் பேச அனுமதிக்கும் நேரம் இது. உங்களில் சிலர் படைப்பாற்றல் மூலம் வெற்றிகளை குவிப்பிர்கள். உங்கள் பிரச்னைகளின் தன்மையை முறையாக உள்வாங்கி கொண்டு செயல்படவும். உங்கள் சமூக வாழ்க்கை இந்த வாரம் சிறப்பாக இருக்கும். குழந்தைகள் உடன் வெளியே சென்று வேடிக்கையான, இலகுவான தருணங்களை அனுபவிப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில், முன்னேற்றம் கிடைக்கும். 

குரங்கு (1944, 1956, 1968, 1980, 1992, 2004, 2016)

இந்த வாரத்தில் காதல் மற்றும் நட்புகளில் கவனமாக இருக்கவும். சில பிரச்னைகள் உங்கள் உறவுகளை பாதிக்கலாம். பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து செயல்படுங்கள். பணியிடங்களில் உங்களின் எதிர்ப்புகள் அதிகரிக்கலாம் என்பதால் கவனம் தேவை. அலுவலக கூட்டங்களில் உங்களை தனித்து நிறுத்த முயற்சி செய்யுங்கள். தொழில் ரீதியாக நேர்மறையான பலன்கள் கிடைக்கும். உங்களின் வளர்ச்சியை கண்டு பலரும் பிரம்மிப்பார்கள். 

சேவல் (1945, 1957, 1969, 1981, 1993, 2005, 2017)

இந்த வாரம் பணி மற்றும் குடும்ப வாழ்கை இதமாக இருக்கும். வாழ்கையில் உங்களை நிலைத்திருத்தும் திறன்களை கொண்டு இருப்பீர்கள். வாழ்கை துணையின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படுங்கள். இது உங்கள் உறவை மேலும் வலுப்படுத்தும். உங்கள் சமூக வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்கை செழிப்பாக இருக்கும்.

நாய் (1946, 1958, 1970, 1982, 1994, 2006, 2018)

இந்த வாரம் உணவு, கேளிக்கை, கொண்டாட்டங்களிள் ஈடுபட்டு மகிழ்வீர்கள். உற்சாகத்தை உயர்த்த, பண்டிகைகளையும் அன்பானவர்களுடனான தொடர்புகளையும் தழுவுங்கள். உங்கள் காதல் வாழ்க்கை கலகலப்பாக இருக்கும். சிலர் தங்கள் காதலை குடும்பத்தினருக்கு தெரியப்படுத்துவார்கள். தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நேர்மறை ஆற்றல் மூலம் சிறப்பான செயல்களை செய்வீர்கள். 

பன்றி (1947, 1959, 1971, 1983, 1995, 2007, 2019)

இந்த வாரம் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கலாம் என்பதால் நம்பிக்கையை கைவிடாமல் இருக்கவும். சுய-கவனிப்பு உங்களுக்கு புத்துணர்வை தரும். அன்பானவர்களிடம் வெளிப்படையாக செயல்படுங்கள், அவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.அலுவலக பணிகளில் உங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். வணிக நிகழ்வுகள் மூலம் புதிய நட்புகள் கிடைக்கும். சில வாய்ப்புகள் உருவாக அதிக நேரம் எடுக்கும், ஆனால் அவை பெரிய வெகுமதிகளை கொடுக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner