லைகா நிறுவனத்தின் மீது கோபத்தில் இருக்கும் அஜித்.. விடாமுயற்சி தாமதத்துக்கு யார் காரணம்.. மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி
லைகா நிறுவனத்தின் மீது கோபத்தில் இருக்கும் அஜித்.. விடாமுயற்சி தாமதத்துக்கு யார் காரணம் என மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி பேட்டியளித்துள்ளார்.
லைகா நிறுவனத்தின் மீது கோபத்தில் இருக்கும் அஜித் பற்றியும் விடாமுயற்சி படத்திற்கான தாமதம் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி பேட்டியளித்துள்ளார்.
இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி மீடியா சர்க்கிள் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘’விடாமுயற்சி படத்தின் கதையைவிட, விடாமுயற்சி படத்தை எடுக்க நடக்கும் முயற்சிகள் திடீர் திருப்பங்கள் நிறைந்த கதையாக இருக்கிறது.
இதுதொடர்பாக விசாரிக்கையில் டிசம்பரில் தான் அஜித் தேதி கொடுத்திருந்ததாக சொன்னார்கள். ஆனால், அஜித் தரப்பில் இருந்து நம்மைத் தொடர்புகொண்டார்கள். தீபாவளிக்கு விடாமுயற்சி படத்தின் டீஸர் வெளியாகுமென சொன்னீர்கள். அது வெளிவரவில்லை என்றால், நம்மைப் பிடித்து திட்டுவார்கள் எனச் சொன்னார்கள். கூடுதலாக என்ன சொன்னார்கள் என்றால், அஜித் இப்போது குட் பேட் அக்லி திரைப்படத்தில் தாடி வைத்து நடித்து வருகிறார். ஆனால், விடாமுயற்சி படத்தில் அளவான தாடியுடன் அஜித் நடிக்க வேண்டும். அதனால், குட் பேட் அக்லியை முடிச்சிட்டுத்தான், விடாமுயற்சியில் நடிக்கப்போகிறார், அஜித் என்னும் தகவலை அஜித் தரப்பு என்னிடம் சொன்னார்கள். அதுதான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்ற்று நான் நினைக்கிறேன். அடுத்து ஜனவரி மாதம் அஜித் கார் ரேஸுக்கு போகப்போகிறார்.
விடாமுயற்சி பட தாமதத்துக்குக் காரணம் என்ன?:
இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, முதலில் குட் பேட் அக்லியை முடித்துவிட்டு, அடுத்து ரேஸுக்குப் போயிட்டு வந்தபின் தான், அஜித் விடாமுயற்சி படத்தில் எஞ்சியிருக்கும் காட்சிகளை நிறைவுசெய்துகொடுப்பார் என்று தோன்றுகிறது. அதனால் தான் டீஸரை வந்து, விடாமுயற்சி படக்குழு தற்காலிகமாக நிறுத்திவைச்சுட்டாங்க. ஏனென்றால் விடாமுயற்சி படமே எப்போது முடியும் என்று தெரியவில்லை.
லைகாவை பொறுத்தவரைக்கும் தங்கள் பேனரில் நடிக்கும் நடிகர்களின் நட்பினைப் பராமரிக்கவில்லை. அதனால் தான், கத்தி படத்துக்குப் பின், விஜய் லைகாவுக்கு கால்ஷீட்டே கொடுக்கவில்லை. மேலும், ஏதோ கொடுக்கல், வாங்கலில் சிக்கல் இருந்திருக்கும் என்று தான் நாம் புரிந்துகொள்ளமுடியும். அடுத்து ரஜினியை வைத்து பல படங்கள் செய்த லைகா நிறுவனம், வேட்டையன் படத்தில் பேசிய சம்பளத்தில் இருந்து 40 கோடி ரூபாய் பாக்கி வைச்சிருக்காங்க. பொதுவாகவே, தமிழ் சினிமாவில் கதாநாயகிகளைப் பொறுத்தவரை சூட்டிங் முடித்ததும் மொத்த சம்பளத்தைக் கொடுத்துவிடுவார்கள். ஏனெனில், டப்பிங் வேறு நபர்களை வைத்து செய்வதால் தான்.
டப்பிங் பணி:
ஹீரோ நடிகர்களைப் பொறுத்தவரை, டப்பிங் பேசுவதற்கு முன்பு சம்பளத்தை செட்டில் செய்யவேண்டும் என்பது தான் தமிழ் சினிமாவில் இருக்கும் விதி. அப்போது 40 கோடி ரூபாய் ரஜினிக்கே சம்பள பாக்கி வைத்துள்ளனர், லைகா நிறுவனத்தினர். இதனால், ரஜினி கோபமாக கூலி படத்தில் நடிக்கப் போய்விடுகிறார். பின், லைகா நிறுவனம் தங்களது விநியோகஸ்தர்களான ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தாரிடம்பேசி, அவர்கள் மூலம் பணத்தை செட்டில் செய்து, பின் ரஜினியை டப்பிங் பேச வைத்தனர். இதன்மூலம் ரஜினியின் நட்பை லைகா சரிவர கடைப்பிடிக்கவில்லை என்பதைத் தான் இது காட்டுகிறது.
அதே மாதிரி தான், லைகா நிறுவனம், அஜித்தையும் டீல் செய்திருக்கிறது. அஜித்தைப் பொறுத்தவரை, மாதம் மாதம் 5 கோடி ரூபாய் கொஞ்சம் கொஞ்சமாக சம்பளத்தைப் பிரித்துக்கொடுக்கவேண்டும். அதை, தயாரிப்பு நிறுவனம், லைகா செய்யவில்லை. அதே மாதிரி, லண்டனில் அஜித் ஒரு சொத்து வாங்க முயற்சித்தார். அந்த விவகாரத்தில் அஜித்துக்கு தாங்கள் உதவுவதாகக் கூறி, லைகா அந்த வாக்கைக் காப்பாற்றவில்லை எனத் தெரிகிறது, இதனால் தான், அஜித் கடுப்பாகிவிட்டார். மொத்தத்தில் லைகாவின் செயல்பாட்டினால், அஜித் அதிருப்தியானதால் தான், விடாமுயற்சி படம் தாமதம் ஆவதாகத் தெரிகிறது’’ என மூத்த பத்திகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.
நன்றி: மீடியா சர்க்கிள்
டாபிக்ஸ்