எங்கேயோ பார்த்த மயக்கம்.. வித்தியாசமான தமிழ் உச்சரிப்பு; பாடல்களை ஹிட் செய்யும் பாடகர் உதித் நாராயணனின் கதை
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  எங்கேயோ பார்த்த மயக்கம்.. வித்தியாசமான தமிழ் உச்சரிப்பு; பாடல்களை ஹிட் செய்யும் பாடகர் உதித் நாராயணனின் கதை

எங்கேயோ பார்த்த மயக்கம்.. வித்தியாசமான தமிழ் உச்சரிப்பு; பாடல்களை ஹிட் செய்யும் பாடகர் உதித் நாராயணனின் கதை

Dec 01, 2024 07:37 AM IST Marimuthu M
Dec 01, 2024 07:37 AM , IST

  • எங்கேயோ பார்த்த மயக்கம்.. வித்தியாசமான தமிழ் உச்சரிப்பு; பாடல்களை ஹிட் செய்யும் வித்தைக்காரர் பாடகர் உதித் நாராயணனின் கதையைப் பார்ப்போம்.

மறைக்கப்பட்ட பூவின் வாசம் எப்படியும் வெளிவரும் என்பது போல உண்மையான திறமை கட்டாயம் வெளிவரும் என்பதே இயற்கையின் நியதி. அப்படிப்பட்ட சிறப்பு திறமைசாலியான கலைஞர்களில் ஒருவர்தான் பாடகர் உதித் நாராயண். இவருக்கு அறிமுகம் தேவை இல்லை. இவரது குரலுக்கு இந்த இந்திய நாடே அடிமை என்று கூறினால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட வசீகர மற்றும் வித்தியாசமான குரல் கொண்ட பாடகர்களில் இவரும் ஒருவர். இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து முக்கிய மொழிகளிலும் இவர் பாடியுள்ளார்.

(1 / 6)

நான்கு தேசிய விருதுகள் மற்றும் பல விருதுகள் என விருதுகளை தன் பக்கம் குவித்தாலும், மிகப்பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை இவர் தன் வசம் வைத்துள்ளார். அதுவே இவருக்கு மிகப்பெரிய விருதாகும். இவருடைய தந்தையார் நேபாளத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். தாய் பீகார் மாநிலம், பைசியை பூர்வீகமாகக் கொண்டவர். இந்த தம்பதியருக்கு டிசம்பர் ஒன்றாம் தேதி அன்று 1955ஆம் ஆண்டு மகனாக உதித் நாராயணன் பிறந்தார்.

(2 / 6)

நேபாளத்தில் ஒரு நாட்டுப்புறக் கலைஞராகத் தனது வாழ்க்கை பயணத்தைத் தொடங்கினார் உதித் நாராயண். பெரும்பாலான நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி அந்த மக்கள் மத்தியில் மிகப்பெரிய பெயரைப் பெற்றார். இந்த நாட்டுப்புறப் பாடல்கள் இவரை மும்பைக்கு வரவழைத்தது. அதன் பிறகு 1990-ல் இவருடைய திரைத்துறை பாடல் பயணம் தொடங்கியது.

(3 / 6)

பின் பாலிவுட் உச்ச நடிகர்களுக்குத் தனது குரலைச் சமர்ப்பித்தார். இவருடைய பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தன. மிகப்பெரிய வெற்றி அடைந்தன. பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனத் தென்னிந்திய மொழிகள் முழுவதும் தன்னுடைய குரல் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினார், உதித் நாராயண்.

(4 / 6)

தனித்துவமான குரல் அமைப்பைக் கொண்ட உதித் நாராயணுக்குத் தமிழில் இருக்கின்ற ரசிகர்கள் குறித்து சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்துள்ளார். காதலன் படத்தில் காதலிக்கும் பெண்ணின் கைகள் பாடல், முத்து படத்தில் குலுவாலிலே பாடல், மிஸ்டர் ரோமியோ படத்தில் ரோமியோ ஆட்டம் போட்டால் பாடல், கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்தில் கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்குப் பாடல், கண்ணெதிரே தோன்றினாள் படத்தில் ஈஸ்வரா பாடல், ரிதம் படத்தில் அய்யோ பத்திக்கிச்சு பாடல், உள்ளம் கொள்ளை போகுதே படத்தில் புயலே புயலே பாடல், திருடா திருடி படத்தில் ‘வண்டார் குழலி’ பாடல் எனப் பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். காதல் பாடல்களைப் பாடுவதற்கு இவருக்கு நிகர் இவர் மட்டுமே. அந்த அளவிற்குக் காற்றிலேயே வார்த்தைகளைக் காதில் கொண்டு சேர்ப்பார். தமிழ் திரைப்படத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்ற முக்கிய இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் இவர் ஒரு முக்கிய பாடகர் ஆவார்.

(5 / 6)

ரட்சகன் திரைப்படத்தில் சோனியா சோனியா என்று இவர் குரல் கேட்கும் போது அனைவரும் உற்சாகமாகி விடுவார்கள். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் எங்கேயோ பார்த்த மயக்கம் என்ற பாடலைக் கேட்டால் காதல் வராதவருக்கும் காதல் வந்துவிடும். கில்லி படத்தில் கொக்கர கொக்கரக்கோ பாடலுக்கு இன்று வரை அனைவரும் உற்சாகப்படுகிறார்கள். அப்படி என்றால் இசை மட்டும் இல்லாது இவரது குரலுக்கும் தனித்துவம் இருக்கின்றது என்பது தானே அர்த்தம். ரன் திரைப்படத்தில் காதல் பிசாசே என்ற இவருடைய உச்சரிப்பு மிகப்பெரிய பேசு பொருளாகப் படம் வந்த காலகட்டத்தில் பேசப்பட்டது. அப்படி ஒரு தனித்துவமான குரலைக் கொண்டவர் இவர். இந்த அசாத்திய கலைஞனின் 69வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. மிகப்பெரிய கூட்டத்தை தன் குரலால் கட்டிப் போடத் தெரிந்த ஒரு சில ஜாம்பவான்களில் இவரும் ஒருவர் என்று கூறினால் அது மிகையாகாது

(6 / 6)

மற்ற கேலரிக்கள்