Venkat Prabhu: இரண்டு பெண் பிள்ளைகளுக்கு அப்பா நான்..இனியாவது பாலியல் குற்றவாளிகளை தண்டியுங்கள் - வெங்கட் பிரபு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Venkat Prabhu: இரண்டு பெண் பிள்ளைகளுக்கு அப்பா நான்..இனியாவது பாலியல் குற்றவாளிகளை தண்டியுங்கள் - வெங்கட் பிரபு

Venkat Prabhu: இரண்டு பெண் பிள்ளைகளுக்கு அப்பா நான்..இனியாவது பாலியல் குற்றவாளிகளை தண்டியுங்கள் - வெங்கட் பிரபு

HT Tamil
Sep 03, 2024 06:48 PM IST

தமிழ் திரையுலகில் நிலவும் பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசியுள்ள இயக்குநர் வெங்கட் பிரபு, இனியாவது பாலியல் குற்றவாளிகளை தண்டியுங்கள் என கூறியுள்ளார். வைரமுத்து, ராதாரவி மீதான பாடகி சின்மயி குற்றச்சாட்டுக்கு சினிமாத்துறை அவர்களை பார்த்துக்கொள்ளும் என்றும் கூறியுள்ளார்.

Venkat Prabhu: இரண்டு பெண் பிள்ளைகளுக்கு அப்பா நான்..இனியாவது பாலியல் குற்றவாளிகளை தண்டியுங்கள் - வெங்கட் பிரபு
Venkat Prabhu: இரண்டு பெண் பிள்ளைகளுக்கு அப்பா நான்..இனியாவது பாலியல் குற்றவாளிகளை தண்டியுங்கள் - வெங்கட் பிரபு

இதற்கிடையே படம் தொடர்பாக பல்வேறு பேட்டிகளில் பங்கேற்று வெங்கட் பிரபு பேசி வருகிறார். அப்படி பிரபல ஊடகமான என்டிடிவிக்கு அவர் அளித்த பேட்டியின்போது, மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு தமிழ் திரையுலகம் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டிய நேரம் இது என்று தான் நம்புவதாக கூறினார்.

எல்லா துறைகளிலும் பெண்கள் பிரச்னையை சந்திக்கிறார்கள்

பெண்களுக்கான பாதுகாப்பான பணிச்சூழலுக்கான தனது நம்பிக்கையைப் பற்றி என்டிடிவி பேட்டியில் வெங்கட்பிரபு பேசினார், "இனியாவது தமிழ் திரையுலகம் பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றி தெளிவுபடுத்தத் தொடங்க வேண்டும். எனக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். பெண்கள் வேலை செய்யும் பணி சூழல் பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும்.

ஊடகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் விளையாட்டு உட்பட அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு எதிராக பாலியல் செயல்களும், பாதுகாப்பற்ற தன்மையும் நிலவுகின்றன. ஆனால் சினிமா துறை பெரும்பாலும் கவனத்தை ஈர்க்கிறது. எனவே இந்த விஷயத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதி செய்யுங்கள், அப்போது தான் ஆண்களுக்கு அச்ச உணர்வு ஏற்படும்.

வைரமுத்து, ராதாரவி மீதான குற்றச்சாட்டுக்கு வெங்கட் பிரபு கருத்து

பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் நடிகர் ராதா ரவிக்கு எதிரான பாடகி சின்மயி பாலியல் துன்புறுத்தல் புகார்கள் மீது தமிழ்த் திரையுலகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்று வெங்கட் பிரபுவிடம் கேட்டபோது, அதன் “சினிமாத்துறையினர் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள்” என்று கூறினார்.

முன்னதாக பாடகி சின்மயி, திரைப்படத் துறையை பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கு சினிமா துறை சார்ந்தவர்களோ அல்லது பெப்சி அமைப்போ எதையும் செய்யவில்லை என்று கூறியிருந்தார்.

ஹேமா கமிட்டி அறிக்கை

நீதிபதி கே ஹேமா கமிட்டி அறிக்கை கடந்த ஆகஸ்ட் 19 அன்று வெளியிடப்பட்டது. 2017இல் மலையாள நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கில், மலையாள ஹீரோவான நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் வெளியாகியிருக்கும் ஹேமா கமிட்டி அறிக்கையில் மலையாளத் திரையுலகில் பெண்கள் அனுபவிக்கும் துன்புறுத்தல்கள் மற்றும் சுரண்டல்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை வெளியான பின்பு பிரபல மலையாள நடிகர்கள் மீது நடிகைகள் சிலர் பாலியல் புகார்களை அளித்துள்ளனர். இதுதொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட நடிகர்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது.

மலையாள சினிமாவில் விஸ்வரூம் எடுத்திருக்கும் இந்த விவகாரத்தை தொடர்ந்து தமிழிலும் ஒரு சில நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளிப்படையாக பேச தொடங்கியுள்ளனர். அத்துடன் நடிகர்கள், இயக்குநர்கள் என சினிமா பிரபலங்கள் பலரும் இதுபற்றி தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.