OTT Web Series: சுவாரஸ்யமான டாப் வெப் சீரிஸ்கள்.. அடுத்த சீசன் இந்த ஆண்டு வெளிவருமா? - காத்திருக்கும் ரசிகர்கள்-when will these ott web series next part will release fans ask question - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ott Web Series: சுவாரஸ்யமான டாப் வெப் சீரிஸ்கள்.. அடுத்த சீசன் இந்த ஆண்டு வெளிவருமா? - காத்திருக்கும் ரசிகர்கள்

OTT Web Series: சுவாரஸ்யமான டாப் வெப் சீரிஸ்கள்.. அடுத்த சீசன் இந்த ஆண்டு வெளிவருமா? - காத்திருக்கும் ரசிகர்கள்

Aarthi Balaji HT Tamil
Sep 01, 2024 12:26 PM IST

OTT Web Series: ஓடிடி தளங்களில் பல வெப் சீரிஸ்கள் வெவ்வேறு கதைகளுடன் வெளி வந்துள்ளன. இப்போது இதன் தொடர்ச்சிகளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன.

OTT Web Series: சுவாரஸ்யமான டாப் வெப் சீரிஸ்கள்.. அடுத்த சீசன் இந்த ஆண்டு வெளிவருமா? - காத்திருக்கும் ரசிகர்கள்
OTT Web Series: சுவாரஸ்யமான டாப் வெப் சீரிஸ்கள்.. அடுத்த சீசன் இந்த ஆண்டு வெளிவருமா? - காத்திருக்கும் ரசிகர்கள்

எனவே தற்போது இந்த வெப் சீரிஸின் இரண்டாவது சீசனுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இந்த வெப் சீரிஸின் தொடர்ச்சிகளின் ஓடிடி வெளியீட்டை தெரிந்து கொள்வோம்.

ஆஷ்ரம் 4

அனிமல் வில்லன் பாபி தியோலின் வெப் சீரிஸ் 'ஆஷ்ரம் 4' இந்த ஆண்டு இன்னும் வெளியாகவில்லை. இந்த தொடரின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் போபா சுவாமியாக நடிக்கும் சந்தன் ராய் சன்யால், மார்ச் 2024 இல் பாலிவுட் ஹங்காமாவுக்கு அளித்த பேட்டியில், நான்காவது சீசனின் படப்பிடிப்பு இந்த ஆண்டு நிறைவடைந்ததாகக் கூறினார்.

டெல்லி க்ரைம் 3

' டெல்லி க்ரைம் 3 ' இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் முக்கிய வேடத்தில் நடித்த ஷெபாலி ஷா, அக்டோபர் 2023 இல் இந்தியா டுடேவிடம், 'நாங்கள் இன்னும் தொடரின் படப்பிடிப்பைத் தொடங்கவில்லை. இந்தத் தொடர் இன்னும் ஸ்கிரிப்டிங் நிலையில் உள்ளது. அடுத்த வருடம் படப்பிடிப்பை தொடங்குவோம், அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என நினைக்கிறேன். இருப்பினும், படப்பிடிப்பை நாங்கள் தொடங்குவதையும் முடிப்பதையும் பொறுத்து வெளியீட்டு தேதி இருக்கும்.

ஃபர்ஜீ 2

ஃபர்ஜீ 2 பற்றி கடந்த ஆண்டு நடிகை ராஷி கண்ணா கூறுகையில், " எங்கள் இயக்குனர் ராஜ் சாரிடம் பேசினேன், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 'ஃபர்ஜி 2' படப்பிடிப்பு தொடங்கும், எனவே 'ஃபர்ஜி 2' அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று கூறினார். ."

' காலா பானி 2 '

' காலா பானி 2 ' இன் இரண்டாவது சீசன் நவம்பர் 13, 2023 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என்று நெட்ஃபிளிக்ஸ் அறிவித்து இருந்தது. ஆனால், இப்போது வரை ஸ்ட்ரீமிங் செய்யவில்லை. இருப்பினும், இந்த ஆண்டு ஓடிடி ஸ்ட்ரீமிங்கிற்கு வர வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

மிர்சாபூர் 4

ஓடிடியில் க்ரைம் த்ரில்லர் படம் என்று சொன்னால் அனைவருக்கும் உடனே நினைவுக்கு வருவது, மிர்சாபூர். இந்த தொடர் ஏற்கனவே மூன்று சீசன்களை நிறைவு செய்து உள்ளது. இந்த தொடரில் இருந்து ஒரு போனஸ் எபிசோட் பார்வையாளர்களுக்கு வருகிறது. மூன்றாவது சீசனில் பார்வையாளர்கள் அதிகம் தவறவிட்ட ஒரு கதாபாத்திரத்துடன் இந்த எபிசோட் வருவதாக அமேசான் ஃபிரைம் வீடியோ அறிவித்து உள்ளது.

மிர்சாபூர் 3 போனஸ் எபிசோட் சமீபத்தில் Amazon Prime OTTயில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டது. இருப்பினும், மிர்சாபூர் 4 இப்போது சுவாரஸ்யமான பேச்சாக மாறி இருக்கிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.