தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Varisu Movie Collects 200 Crores In Seven Days

Varisu Collection: 7 நாட்களில் ரூ.200 கோடி வசூலை தாண்டிய வாரிசு

Aarthi V HT Tamil
Jan 18, 2023 12:08 PM IST

வாரிசு படம் வெளியாகி 7 நாட்களில் ரூ. 210 கோடி வசூல் செய்து இருப்பதாக படக்குழு அறிவித்து உள்ளது.

வாரிசு வசூல்
வாரிசு வசூல்

ட்ரெண்டிங் செய்திகள்

ஆனால் பலரும் தெலுங்கு டப் படம் போல் இருப்பதாக விமர்சனம் எழுந்து வருகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் படம் வெளியானது.

இந்நிலையில் வாரிசு படம் உலகம் முழுவதும் ரூ. 210 கோடி வசூலித்து உள்ளது. இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது. 

அதில், "மூன்று மடங்காக 7 நாட்களில் உங்கள் அன்பைப் பெற்று கொண்டோம் நண்பா. #MegaBlockbusterVarisu உலகளவில் 210Crs+ வசூலைக் கடந்து உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த செய்தி விஜய் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

வாரிசு திரைப்படம் முதல் 5 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்து உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.

இந்தியாவில் ரூ.17 கோடி வசூலித்து (நெட்) இன்னும் பலமாக உள்ளது. இந்திய பாக்ஸ் ஆபிஸ் மட்டுமின்றி, வெளிநாட்டு சந்தையிலும் வாரிசு படம் பெரும் வியாபாரம் செய்து வருகிறது. வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா, நார்வே மற்றும் அயர்லாந்தில் வாரிசு சிறப்பாக செயல்படுவதாக கூறினார். 

இங்கிலாந்தில் வாரிசு படத்தை விநியோகித்த அஹிம்சா என்டர்டெயின்மென்ட், அதன் இரண்டாவது வாரத்திலும் வாரிசுக்கான ட்விட் செய்து உள்ளது.

இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளார். இப்படத்தில் விஜய் தவிர, ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, ஜெயசுதா, யோகி பாபு, ஸ்ரீகாந்த் மேகா மற்றும் ஷாம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் எஸ் தமன் இசையமைத்தார் மற்றும் பெரும்பாலான பாடல்கள் சார்ட்பஸ்டர்களாக இருந்தன.

IPL_Entry_Point

டாபிக்ஸ்