வடிவேலுவின் பேமஸ் மீம் டெம்ளேட்..தமிழில் சிறந்த க்ரைம் த்ரில்லர் - இன்று வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வடிவேலுவின் பேமஸ் மீம் டெம்ளேட்..தமிழில் சிறந்த க்ரைம் த்ரில்லர் - இன்று வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்

வடிவேலுவின் பேமஸ் மீம் டெம்ளேட்..தமிழில் சிறந்த க்ரைம் த்ரில்லர் - இன்று வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Oct 05, 2024 09:57 AM IST

Tamil Movies Released On This Day: வடிவேலுவின் பேமஸ் மீம் டெம்ளேட் இடம்பிடித்த படம், தமிழில் சிறந்த க்ரைம் த்ரில்லர் படங்களின் வரிசையில் இணைந்த ராட்சசன் உள்பட இன்று வெளியான தமிழ் படங்கள் பற்றி பார்க்கலாம்.

Tamil Movies: வடிவேலுவின் பேமஸ் மீம் டெம்ளேட்..தமிழில் சிறந்த க்ரைம் த்ரில்லர் - இன்று வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்
Tamil Movies: வடிவேலுவின் பேமஸ் மீம் டெம்ளேட்..தமிழில் சிறந்த க்ரைம் த்ரில்லர் - இன்று வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்

அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளில் சில படங்கள் இந்த நாளில் வெளியானபோதிலும், அவை பெரிய ஸ்டார்கள் படமாக இருக்கவில்லை. இன்றைய நாளில் வெளியான தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ

தவம்

அருண் விஜய், வந்தனா குப்தா, வடிவேலு, ஜனகராஜ் உள்பட பலர் நடித்து ரொமாண்டிக் ட்ராமா படமாக உருவாகி 2007இல் வெளியான தவம் என்ற இந்த படத்தை சக்தி பரமேஷ் இயக்கியுள்ளார். அர்ஜுன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். விமர்சக ரீதியாக பாராட்ட பெற்ற இந்த படம் பெரிய வசூலை குவிக்கவில்லை. படத்தில் டி. இமான் இசையில் கண்ணதாசா கண்ணதாசா என்ற மெலடி பாடல் பெரிய அளவில் ரீச் ஆகின

தெலுங்கில் ரவிதேஜா நடிப்பில் பிளாக் பஸ்டர் படமாக இருந்த இட்லு ஸ்ரவாணி சுப்ரமணியம் தமிழ் ரீமேக்காக இருந்த தவம், தெலுங்கில் செய்த மேஜிக்க செய்யாமல் போனது. இருப்பினும் படத்தில் வடிவேலு காமெடி பெரிய அளவில் ரீச் ஆனது. வடிவேலுவின் மிகவும் பேமஸ் ஆன மீம் டெம்ப்ளேட் ஆன "ஆஹான்" என்ற எக்ஸ்பிரஷன் வடிவேலு இந்த படத்தில் கொடுத்தது தான். திருடனாக வரும் வடிவேலு செய்யும் லூட்டிக்கள் வயிற்றை புண்ணாக்கும் விதமாக அமைந்திருந்தன. வடிவேலு மீம் டெம்ப்ளேட்டை பிரபலமாக்கிய தவம் படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் ஆகின்றன.

பசுபதி மே/பா ராசக்காபாளையம்

ரஞ்சித், சிந்து துலானி, விவேக், மேக்னா நாயர், கஞ்சா கருப்பு உள்பட பலர் நடித்து 2007இல் பசுபதி மே/பா ராசக்காபாளையம் படத்தை கே. செல்வபாரதி இயக்கியுள்ளார். கிராமத்து பின்னணியலான பேமிலி ட்ராமா பாணியில் உருவாகியிருக்கும் படத்தில் காமெடி காட்சிகள் பிரபலமாகின. குறிப்பாக போலீஸாக வரும் விவேக்கின் காமெடி காட்சிகள் வரவேற்பை பெற்றன. பி மற்றும் சி செண்டர்களில் வரவேற்பை பெற்று சராசரி வசூலை பெற்றது. தேவா இசையில் ஒன்னு ரெண்டு மூணு என்கிற அவரது சிக்னேச்சர் ஸ்டைல் பாடல் ஒன்று ஹிட்டானது.

சோலோ

நான்கு வெவ்வேறு கதைகள், அனைத்து கதைகளிலும் ஒரே ஹீரோ, காதல் மற்றும் ஆக்ச‌ன் கலந்த தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான பரிசோதனை முயற்சி படம் சோலோ. பிஜாய் நம்பியார் இயக்கியிருந்த இந்த படத்தில்

துல்கர் சல்மான். சாய் தன்ஷிகா, ஆர்த்தி வெங்கடேஷ், ஸ்ருதி ஹரிஹரன், நேகா ஷர்மா, செளபின் ஷாகிர், ஜான் விஜய், அழகம் பெருமாள், மனோஜ் கே ஜெயன், நாசர், சுரேஷ் மேனன் உள்பட பலரும் நடித்திருப்பார்கள்.

வேர்ல்ட் ஆஃப் சேகர், வேர்ல்ட் ஆஃப் த்ரிலோக், வேர்ல்ட் ஆஃப் சிவா, வேர்ல்ட் ஆஃப் ருத்ரா என நான்கு கதைகள் இருக்க ஒவ்வொரு கதைக்கும் துல்கர் சல்மான் ஜோடியாக ஒவ்வொரு ஹீரோயின்கள் நடித்திருப்பார்கள்.

படம் ரசிகர்களை கவர்ந்ததோடு, விமர்ச ரீதியாகவும் பாராட்டை பெற்ற நிலையில், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்ட ரிலீஸ் ஆனது. சிறந்த ரெமாண்டிக் திர்ல்லர் படமாக இருந்த சோலா வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் ஆகிறது

ராட்சசன்

தமிழில் வெளியான சிறந்த சைக்காலஜிக்கல் க்ரைம் த்ரில்லர் படமாக ராட்சசன் இருந்து வருகிறது. விஷ்ணு விஷால் , அமலாபால், அம்மு அபிராமி, காளி வெங்கட் உள்பட பலர் நடித்து 2018இல் வெளியான இந்த படத்தை ராம் குமார் இயக்கியுள்ளார்.

இளம் பெண்களை கடத்தி கொலை செய்யும் சீரியல் கில்லரை போலீசாக வரும் விஷ்ணு விஷால் கண்டுபிடிப்பதே படத்தின் ஒன் லைன். விறுவிறுப்பான திரைக்கதை அம்சத்தில் உருவாகியிருக்கும் படம் ஒவ்வொரு காட்சியும் சீட் நுணியில் அமரவைக்கும் விதமாக இருந்தது.

விமர்சக ரீதியாக பாராட்டப்பட்ட இந்த படம் ரசிகர்களிடமும் அமோக வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் படம் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் வெளியான சிறந்த த்ரில்லர் படங்களில் லிஸ்டில் இடம்பிடித்த ராட்சசன் வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகள் ஆகிறது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.