கோடியில் சம்பளம் கேட்டேனா? - “எந்த நாய் வேணாலும்.. சாணி மேல கல் எறிஞ்சா நம்ம ” - பயில்வானை பதம் பார்த்த வெங்கடேஷ் பட்!
தயவுசெய்து அதுபோல திட்டி கமெண்ட்களை பதிவிட வேண்டாம். அவருடைய நிலைமை என்னவென்று தெரியவில்லை பாவம் அவர் பணத்திற்காக செய்கிறாரா, மனநிலை சரியில்லாமல் செய்கிறாரா தெரியவில்லை. - பயில்வானை பதம் பார்த்த வெங்கடேஷ் பட்!
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு அறிமுகமே தேவையில்லை. இந்த நிகழ்ச்சியில் நடுவராக கடந்த 4 சீசன்களாக நடுவராக இருந்தவர் வெங்கடேஷ் பட். இவர் 5 ஆவது சீசனில் தொடராமல், சன் டிவிக்குச் சென்று ‘டாப் குக்கு டூப் குக்கு' என்ற குக்கிங் நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்தினார்.
இந்த இரு நிகழ்ச்சிகளும் அண்மையில் முடிவடைந்தன. இந்த நிலையில், பிரபல பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன், வெங்கடேஷ் அதிக சம்பளம் கேட்டதாகவும், அதனை விஜய் டிவி ஒத்துக்கொள்ள காரணத்தால்தான், அவர் சன் டிவிக்கு சென்றார் என்றும் பேசி இருந்தார். இந்த நிலையில் அதற்கு வெங்கடேஷ் பட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார்.
யார் அந்த பயில்வான் ரங்கநாதன்?
அதில் அவர் பேசும் போது, “ எல்லோருக்கும் வணக்கம். பேஸ்புக்கில் ஒரு சங்கடமான விஷயம் நடந்திருக்கிறது. அதாவது பயில்வான் ரங்கநாதன் என்ற யாரோ ஒருவர், என்னைப் பற்றி அவதூறாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறாராம். அந்த வீடியோவுக்கு கீழே அவரை திட்டி பல பேர் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறீர்கள்.
என்னை நேசிப்பவர்கள் என்னுடைய ரசிகர்கள் என்னை மதிப்பவர்கள் என் மீது நிறைய பாசம் வைத்திருக்கிறீர்கள் என்பது இதன் மூலமாக எனக்கு தெரிகிறது. தயவுசெய்து அதுபோல திட்டி கமெண்ட்களை பதிவிட வேண்டாம். அவருடைய நிலைமை என்னவென்று தெரியவில்லை பாவம் அவர் பணத்திற்காக செய்கிறாரா, மனநிலை சரியில்லாமல் செய்கிறாரா தெரியவில்லை.
ஏதோ பிழைப்பிற்காக செய்கிறார்.
அவர் ஏதோ அவர் ஏதோ பிழைப்பிற்காக செய்கிறார். அவர் அவரது வேலையை செய்யட்டும். அந்த சாணியில் நாம் சென்று கல் எறிந்து அந்த சாணி, நம்முடைய முகத்தில் வீச வேண்டாம் என்று பார்க்கிறேன். உண்மை இல்லாமல் செய்யக்கூடிய பல விஷயங்கள் இன்று சோசியல் மீடியாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இன்று என்னைப் பற்றி வந்திருக்கிறது.
பரவாயில்லை; காரணம் என்னவென்றால், பொது வாழ்க்கையில் இது மிகவும் சகஜமான ஒன்றுதான். தலைவர் சொன்னது போல யார் என்ன சொன்னாலும் நாம் நம் வழியை பார்த்துக் கொண்டு போய்க் கொண்டே இருப்போம். நாம் நம்முடைய வேலையை செய்வோம். எல்லோரையும் சிரிக்க வைப்போம். நிம்மதியாக இருப்போம்.
யார் என்ன சொன்னாலும், அதைப்பற்றி நமக்கு கவலை இருக்கக் கூடாது. ஆகையால், நீங்கள் தயவு செய்து அதில் தலையிட்டு உங்கள் மன நிம்மதியை கெடுத்துக் கொள்ளாதீர்கள். கிட்டத்தட்ட 500 நபர்களுக்கு மேல் அந்த வீடியோவிற்கு கீழே கமெண்ட் செய்து இருக்கிறீர்கள். மிக மிக நன்றி. ஆனால் சோசியல் மீடியாவில் இது போன்று வரும் செய்திகளுக்கு நாம் ரியாக்ட் செய்து நாம் நம்முடைய தரத்தை குறைத்துக் கொள்ளக் கூடாது. நாம் சூரியனாக இருப்போம். நம்மை பார்த்து எந்த நாய் வேண்டுமென்றாலும் குறைத்துக் கொள்ளட்டும்” என்று பேசி இருக்கிறார்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்