Top 10 Cinema News: அடுத்த வேட்டையில் அஜித்.. சாய் பல்லவியின் அமரன் லுக் - இன்றைய டாப் சினிமா செய்திகள்-top 10 cinema news today on september 27 2024 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top 10 Cinema News: அடுத்த வேட்டையில் அஜித்.. சாய் பல்லவியின் அமரன் லுக் - இன்றைய டாப் சினிமா செய்திகள்

Top 10 Cinema News: அடுத்த வேட்டையில் அஜித்.. சாய் பல்லவியின் அமரன் லுக் - இன்றைய டாப் சினிமா செய்திகள்

Aarthi Balaji HT Tamil
Sep 27, 2024 10:03 PM IST

Top 10 Cinema News: சினிமாவில் இன்று ( அக் . 27 ) நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Top 10 Cinema News: அடுத்த வேட்டையில் அஜித்.. சாய் பல்லவியின் அமரன் லுக் - இன்றைய டாப் சினிமா செய்திகள்
Top 10 Cinema News: அடுத்த வேட்டையில் அஜித்.. சாய் பல்லவியின் அமரன் லுக் - இன்றைய டாப் சினிமா செய்திகள்

தண்டகாரண்யம் ஃபர்ஸ்ட் லுக்

தண்டகாரண்யம் படத்தி்ன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, வரவேற்பை பெற்று உள்ளது.

சத்யராஜை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்

திருப்பதி லட்டு குறித்து சத்யராஜ் எந்த விஷயமும் இதுவரை வாய் திறக்காமல் இருப்பதாக ப்ளூ சட்டை மாறன் சாடியுள்ளார். "ஏம்பா... முன்ன எல்லாம் தமிழர்களுக்கு ஒரு பிரச்னை வந்தா தம் கட்டி சவுண்ட் விடுவ. அதிரடியா நாத்திகம் பேசுவ. இப்ப ஏன் சைலன்ட் ஆகிட்ட? லட்டு பத்தி கருத்து சொல்லலையா? இப்ப நான் பான் இண்டியா நடிகர். குறிப்பா தெலுங்குல. நமக்கு எதுக்கு வம்புன்னு பம்மிட்டேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஓடிடியில் கொட்டுக்காளி

விமர்சக ரீதியாக பாராட்டை பெற்றதோடு, இந்தியாவில் ஆஸ்கர் பரிந்துரை லிஸ்டில் இருக்கும் படம் கொட்டுக்காளி. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.

லப்பர் பந்து பட வசூல்

மொத்தமாக 7 நாட்களில் லப்பர் பந்து பட உலகளவில் ரூ. 10 கோடிக்கும் மேல் வசூல் செய்து அசத்தி உள்ளது.

சாய் பல்லவியின் அமரன் லுக்

இதையடுத்து சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்திருக்கும் புதிய படம் அமரன். தீபாவளி வெளியீடாக இந்த படம் வரவிருக்கிறது. இந்த படத்தில் சாய் பல்லவி கேரக்டரில் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அறந்தாங்கி நிஷா கண்டனம்

மணிமேகலை மற்றும் பிரியங்கா என இருவருக்கும் நெருக்கமாக இருக்கும் அறந்தாங்கி நிஷாவிடம் செய்தியாளர்கள் இன்று ( செப் 27 ) குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் கொடுத்த அறந்தாங்கி நிஷா, “ அங்கு நான் இல்லை. சம்பவம் நடந்த நாளில் குக் வித் கோமாளி ஷோவுக்கு நான் போகவில்லை. அதனால் அங்கு என்ன நடந்தது என்று எனக்கு இன்னுமும் சரியாக தெரியவில்லை. இரண்டு பேரிடமும் நான் பேச வேண்டும் என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறேன் “ என்றார். 

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் பட வசூல் 

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் 22 நாட்களில் உலகளவில் ரூ. 428 கோடி வரை வசூல் செய்து உள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய்யின் கேரியரில் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த இரண்டாவது திரைப்படமும் இதுவே ஆகும்.

மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில் சாமி பிக் பாஸ் 8 ஆவது சீசனில் போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த வேட்டையில் அஜித்

நடிகர் அஜித் குமார், ரேஸுக்காக Ferrari 488 EVO காரை ஓட்டி இருக்கும் ஸ்டில்கள் இன்று வெளியாகி இருக்கிறது. 3902 சிசி எஞ்சின் கொண்ட அந்த கார் சுமார் 350 kmph வேகத்தில் செல்லக்கூடியது. European racing சீசனில் அஜித் பங்கேற்க இருக்கிறார் என அவர் சொல்லப்படுகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.