Top 10 Cinema News: நயன்தாராவின் அன்னப்பூரணி ஒடிடி ரிலீஸ்,பிக் பாஸ் 8 புதிய தொகுப்பாளர்..! இன்றைய டாப் சினிமா செய்திகள்-today top 10 cinema news on august 07 2024 nayantara annaporani ott release bigg boss tamil new host and more - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top 10 Cinema News: நயன்தாராவின் அன்னப்பூரணி ஒடிடி ரிலீஸ்,பிக் பாஸ் 8 புதிய தொகுப்பாளர்..! இன்றைய டாப் சினிமா செய்திகள்

Top 10 Cinema News: நயன்தாராவின் அன்னப்பூரணி ஒடிடி ரிலீஸ்,பிக் பாஸ் 8 புதிய தொகுப்பாளர்..! இன்றைய டாப் சினிமா செய்திகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 07, 2024 08:10 PM IST

நயன்தாராவின் அன்னப்பூரணி ஒடிடி ரிலீஸ், பிக் பாஸ் 8 சீசன் புதிய தொகுப்பாளர், சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என இன்றைய டாப் சினிமா செய்திகளை பார்க்கலாம்

நயன்தாராவின் அன்னப்பூரணி ஒடிடி ரிலீஸ்,பிக் பாஸ் 8 புதிய தொகுப்பாளர், இன்றைய டாப் சினிமா செய்திகள்
நயன்தாராவின் அன்னப்பூரணி ஒடிடி ரிலீஸ்,பிக் பாஸ் 8 புதிய தொகுப்பாளர், இன்றைய டாப் சினிமா செய்திகள்

மமிதா பைஜூ பெயரில் போலி கணக்கு

மலையாள நடிகையான மமிதா பைஜூ நடிப்பில் தமிழில் எந்த படமும் வெளியாகாத போதிலும் அவருக்கான ரசிகர்கள் தமிழ்நாட்டில் அதிகமாகவே உள்ளார்கள். இதற்கு காரணமாக அவரது பிரேமலு படம் அமைந்திருந்தது. இதையடுத்து மமிதா பெயரில் எக்ஸ் கணக்கு ஒன்றில் பதிவுகள் வெளியாகி வந்த நிலையில், எக்ஸ் தளத்தில் தனக்கு எந்த கணக்கும் இல்லை. போலி கணக்கு உருவாக்கி தனது பெயருக்கு அவதூறு விளைவிப்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பேன்" என மமிதா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் 8 சீசன் புதிய தொகுப்பாளர்

பிக் பாஸ் 8 சீசனில் இருந்து கமல் விலகுவதாக அறிவித்த நிலையில், அடுத்த தொகுப்பாளர் யார் என்பது குறித்து விவாதகங்கள் நடந்து வருகின்றன. கடந்த 2022இல் பிக் பாஸ் அல்டிமேட் என டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல், விக்ரம் படம் வேலையால் பாதியில் விலக நடிகர் சிம்பு அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்., எனவே எதிர்வரும் சீசனில் கமல்ஹாசன் இல்லாத நிலையில் சிம்பு தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

அதேபோல் இந்த சீசனில் விஜய் சேதுபதி தொகுப்பாளராக இருக்கலாம் என்கிற தகவலும் உலா வருகின்றன

ஹீரோவான கல்லூரி வினோத்

கல்லூரி படம் மூலம் பிரபலமாக மாரி சீரிஸ் படங்களில் தனுஷுடன் இணைந்து நடித்து வந்த கல்லூரி வினோத், அறிமுக இயக்குநர் வசீகரன் பாலாஜி இயக்கும் அப்பு VI STD படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறாராம்

7ஜி ஒடிடி ரிலீஸ்

சோனியா அகர்வால், ஸ்மிருதி வெங்கட் இணைந்து நடித்திருக்கும் ஹாரர் த்ரில்லர் படமான 7ஜி கடந்த மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படம் ஆஹா தமிழ் ஓடிடியில் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது

ஷங்கரின் கேம் சேஞ்சர் அப்டேட்

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன

பிரபாஸ் நிதியுதவி

வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். இதையடுத்து கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தெலுங்கு நடிகர் பிரபாஸ் ரூ. 2 கோடி நிதியுதவி அளித்துள்ளார்

ஆர்யா புதிய படம்

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் 'ரன் பேபி ரன்' திரைப்படத்தை இயக்கிய ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் ஆர்யா ஹீரோவாக நடிக்கவுள்ளார். மலையாள நடிகர், திரைக்கதை ஆசிரியர் முரளி கோபி இந்த படத்துக்கு கதை எழுதியுள்ளார்.

நடிகை மகள் உயிரிழப்பு

பிரபல பாலிவுட் நடிகையான திவ்யா சேத் மகள் மிஹிகா ஷா உயிரிழந்துள்ளார். இந்த தகவலை திவ்யா சேத் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ள போதிலும், மகளின் இறப்புக்கான காரணத்தை அவர் வெளிப்படுத்தவில்லை

சிவகார்த்திகேயன் படத்தில் லோகேஷ் கனகராஜ்

சிவகார்த்திகேயன் நடிக்கும் அவரது 25வது படத்தில் சிறிய கேமியோ கதாபாத்திரத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தை சுதா கொங்காரா இயக்குகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.