தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Arunachalam: 'ஆண்டவன் சொல்றார்.. அருணாசலம் முடிக்கிறான்' எவர் கிரீன் பஞ்ச்.. ரஜினியின் கேரியரில் மறக்க முடியாத ஹிட் படம்

Arunachalam: 'ஆண்டவன் சொல்றார்.. அருணாசலம் முடிக்கிறான்' எவர் கிரீன் பஞ்ச்.. ரஜினியின் கேரியரில் மறக்க முடியாத ஹிட் படம்

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 10, 2024 06:30 AM IST

Arunachalam: "அதான்டா.. இதான்டா.. அருணாசலம் நான் தான்டா.."ரஜினியை விட வயது குறைந்த இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடித்து வெளிவந்த நகைச்சுவை, ஆக்சன், மசாலா, சென்டிமென்ட் பேக்கேஜ் கலந்த படம்தான் அருணாசலம்.

'ஆண்டவன் சொல்றார்.. அருணாசலம் முடிக்கிறான்' எவர் கிரீன் பஞ்ச்.. ரஜினியின் கேரியரில் மறக்க முடியாத ஹிட் படம்
'ஆண்டவன் சொல்றார்.. அருணாசலம் முடிக்கிறான்' எவர் கிரீன் பஞ்ச்.. ரஜினியின் கேரியரில் மறக்க முடியாத ஹிட் படம்

ட்ரெண்டிங் செய்திகள்

அருணாசலம் நான் தான்டா.."

1997 ல் ஏப்ரல் பத்தாம் தேதியில் ரஜினியின் நடிப்பில் சுந்தர். சி. இயக்கத்தில் முத்து திரைப்பட வெற்றியை தொடர்ந்து வெளி வந்த மாபெரும் வெற்றி படம் அருணாச்சலம். இன்று27 ஆண்டுகளை கடக்கிறது. ரஜினி தனது நெருங்கிய எட்டு நண்பர்களுக்காக உதவும் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட படம். 

ரஜினியின் அந்த காலத்தில் வயது குறைந்த இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடித்து வெளிவந்த நகைச்சுவை, ஆக்சன், மசாலா, சென்டிமென்ட் பேக்கேஜ் கலந்த படம்தான் அருணாசலம். 1990 ல் வெளியான ஹாலிவுட் படமான ப்ருஸ்டர்ஸ் மில்லியன் என்ற படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டதாக தகவல்கள் உண்டு.

டைட்டில் ரோலில் ரஜினியும் வேதவல்லியாக சௌந்தர்யாவும் ரம்பா நந்தினியாகவும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். தொண்டு நிறுவனம் நடத்துபவர்களாக விகே.ராமசாமி, நிழல்கள் ரவி , ரகுவரன், கிட்டி, ஆகியோரும், அறிவழகனாக செந்தில், காத்தவராயனாக ஜனகராஜ், இவர்களுடன் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், மனோரமா, விசு, வடிவுக்கரசி, வினுசக்ரவர்த்தி என்று ஒரு நடிகர் பட்டாளமே நடித்து வெளியான படம். முதல் பகுதி அழகான கிராம சூழலில் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியுடன் வாழும்

அருணாசலம். இவர்கள் பெற்றோர் அம்மையப்பன் ஜானகியுடன் மகிழ்ச்சியாக வாழும் குடும்பம். இவர்கள் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்தினரோடு பங்கேற்க வரும் கதாநாயகி வேதவல்லியாக சௌந்தர்யா நுழைந்ததும் கலகலப்பு தொற்றி கொள்கிறது. 

நாயகி சௌந்தர்யா செந்திலை அருணாசலம் என்று நினைத்து கொள்வதும் அருணாசலத்துக்கு ஊரில் உள்ள மரியாதையை பார்த்து ஆச்சரியப்படுத்துவதுமாக சௌந்தர்யாவின் காட்சிகள் கலகலக்க வைக்கும். இறுதியில் நாயகன், நாயகி சந்திப்பின் ஆரம்பம் வழக்கம்போல டெம்ப்ளேட் ஆக ஊடலும் சாடலும் மோதலுமாய் இருப்பதும் கடைசியில் தீராக் காதலுமாய் இதிலும் மாறுகிறது. திருமணம் வரை செல்லும் போது வடிவுக்கரசி ரஜினியை பார்த்து ஒரு அனாதையாக வந்தவருக்கு சௌந்தர்யாவை திருமணம் செய்ய முடியாது என்று அதிரடியாக சொல்ல கதை வேறு பாதையில் பயணிக்கிறது. ரஜினி கிராமத்தில் இருந்து சென்னை நோக்கி நகருகிறார். அங்கே காத்தவராயனாக வரும் பீடா வியாபாரி ஜனகராஜிடம் வேலைக்கு சேருகிறார்.

ரஜினியின் கழுத்தில் கட்டி இருக்கும் கயிறு அறுந்து விட அதில் இருந்து உந்திராட்சம உருண்டோடி வித்தியாசமான முறையில் ஏற்படும் சம்பவத்தின் மூலம் ரங்காச்சாரியாக வரும் விசுவை சந்திக்கிறார். அவர் ரஜினியின் முகத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். ரஜினி கோடீஸ்வரர் ஒருவரின் மகன் என்பதையும் ரஜினியின் பிறந்த வாழ்க்கை குறித்தும் சொல்லி கதையை விவரித்து விட்டு ஒரு வீடியோ பதிவை ரஜினியிடம் காட்டுகிறார். அதன் பிறகு தனது கோடிஸ்வர தந்தையின் வாரிசுரிமையை பெறுவதற்கு சில நிபந்தனைகளை விதித்தார். அதாவது முப்பது தினங்களில் முப்பது கோடி ரூபாயை செலவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த நிபந்தனைகளை ஏற்க மறுத்த ரஜினி ஏழை மக்களுக்கு அந்த பணத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டுகிறார். ஆனால் உடனிருந்த நால்வரும் மூவாயிரம் கோடியை தங்களது வசமாக்கி கொள்ளும் திட்டம் அறிந்து முப்பது கோடி செலவு செய்ய தயாராகிறார். குதிரை ரேஸ், லாட்டரி சூதாட்டம், செந்திலை ஹீரோவாக நடிக்க வைத்து திரைப்படம் ஜனகராஜை தனது கட்சியின் வேட்பாளராக்கி செலவு செய்ய முற்படும் எல்லா சந்தர்ப்பங்களிலும் நால்வர் கூட்டணி அதை முறியடிப்பதும் அதை சாதுர்யமாக ரஜினி எதிர் கொள்வதும் செம மாஸ். செந்தில், ஜனகராஜ் காட்சிகள் எல்லாம் நகைச்சுவையை அள்ளி தெறிக்கும். முடிவாக ரஜினி முப்பது கோடி செலவு செய்தாரா? மூவாயிரம் கோடி கிடைத்ததா? சௌந்தர்யாவும் ரஜினியும் சேர்ந்தார்களா என்பதும் கிளைமாக்ஸ். சுந்தர் சி தனது பாணியில் நகைச்சுவை விருந்து படைத்து படத்தை வெள்ளி விழா கொண்டாட வைத்தார்.

படத்தில் தேவா இசை விருந்து படைத்து அத்தனை பாடல்களையும் ஹிட் அடிக்க வைத்தார். தமிழக அரசின் மூன்று விருதுகளையும் வென்ற படம்.

ரஜினியின் பல படங்களில் அவர் பேசும் பஞ்ச் டயலாக்குகள் ரசிகர்கள் மத்தியில் படு பிரசித்தம். இன்றும் பல ஹீரோக்கள் தங்களது படங்களிலும் பஞ்ச் டயலாக் வைப்பதும் ரஜினியின் வழியில் தான் என்றே சொல்லலாம். இந்த படத்தில் ரஜினியின் பஞ்ச் டயலாக்...

"ஆண்டவன் சொல்றார்.. 

அருணாசலம் முடிக்கிறான்" என்று அவரது ஸ்டைலிஷ் குரலில் வசனம் வரும் போது செம மாஸ். இன்னும் சொல்ல போனால்

இன்றும் கூட இந்த வசனம் ரஜினியின் டிரெண்டிங் டயலாக் எனலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்