தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tillu Square Box Office Collection Day 7: ஒரே வாரத்தில் ரூ.49 கோடி வசூல்.. தமிழ் சினிமாவை ஓவர் டேக் செய்யும் டோலிவுட்!

Tillu Square Box office Collection Day 7: ஒரே வாரத்தில் ரூ.49 கோடி வசூல்.. தமிழ் சினிமாவை ஓவர் டேக் செய்யும் டோலிவுட்!

Marimuthu M HT Tamil
Apr 05, 2024 04:16 PM IST

Tillu Square Box office Collection Day 7: சித்து ஜொன்னலகட்டா நடித்த தில்லு ஸ்கொயர் படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.

தில்லு ஸ்கொயர் கூட்டத்தில் உச்ச கட்ட ரொமான்ஸில் அனுபாமா பரமேஸ்வரனும் சித்து ஜொன்னலகட்டாவும் இருந்த காட்சி
தில்லு ஸ்கொயர் கூட்டத்தில் உச்ச கட்ட ரொமான்ஸில் அனுபாமா பரமேஸ்வரனும் சித்து ஜொன்னலகட்டாவும் இருந்த காட்சி

ட்ரெண்டிங் செய்திகள்

தெலுங்கு மொழியில், மல்லிக் ராம் இயக்கத்தில் சித்து ஜொன்னலகட்டா மற்றும் அனுபாமா பரமேஸ்வரன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த தில்லு ஸ்கொயர் கடந்த வாரம் மார்ச் 29ஆம் தேதி ரிலீஸானது. 

டிஜே தில்லு என்னும் படத்தின் இரண்டாம் பாகமாக வெளியான ’தில்லு ஸ்கொயர்’ அரங்கம் நிறைந்த காட்சிகளாக தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

காமெடி, காட்டுத்தனமான ரொமான்ஸ், அடிக்கடி அரங்கேறும் லிப் லாக் காட்சிகள், ’தில்லு ஸ்கொயர்’ படத்துக்கு இளைஞர்களிடையே அதிக ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

தில்லு ஸ்கொயர் படம் விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், பாக்ஸ் ஆபிஸில் சுமார் ரூ .49 கோடியை ஈட்டியது என்று Sacnilk.com என்ற இணையதளம் தெரிவித்துள்ளது. 

தில்லு ஸ்கொயர் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்:

தில்லு ஸ்கொயர் திரைப்படம், ரிலீஸான அதன் தொடக்க நாளில் ரூ.11.2 கோடி வசூலித்ததாகத் தெரிகிறது. இரண்டாம் நாள் ரூ.10.25 கோடி வசூல் செய்த இப்படம் மூன்றாவது நாள் மட்டும் ரூ.11.1 கோடியை வசூலித்தது. நான்காம் நாளில் ரூ.6.25 கோடியும், ஐந்தாம் நாளில் ரூ.4.4 கோடியும், ஆறாம் நாளில் ரூ.3.15 கோடியும் வசூலித்துள்ளது. ஏழாம் நாளில் சராசரியாக ரூ .2.65 கோடியை வசூலித்தது. தில்லு ஸ்கொயர் ஒரு வாரத்தில் மொத்தம் சுமார் ரூ.49 கோடியை வசூலித்தது குறிப்பிடத்தக்கது. 

விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணாள் தாக்கூரின் ஃபேமிலி ஸ்டார் இந்த வெள்ளிக்கிழமை வெளியாவதால், படம் எவ்வாறு செயல்படும் என்பதைப் பார்க்க வேண்டும்.

தில்லு ஸ்கொயர் படம் எத்தகையது?

டி.ஜே.தில்லு படத்தின் இரண்டாம் பாகமான தில்லு ஸ்கொயரில் தில்லு என்னும் கதாபாத்திரத்தில் சித்து ஜொன்னலகட்டாவும், அவரது காதலி லில்லியாக அனுபாமா பரமேஸ்வரனும் நடித்துள்ளனர்.

முந்தைய பாகம்போன்றே தில்லு யாரைக் காதலிக்கிறார், அவர்களுக்குள் வரும் சிக்கல்கள், அதன்பின் தில்லு அதனை எப்படிச் சமாளிக்கிறார் என்பதுமே படத்தின் கதை.

ரவி ஆண்டனியுடன் இணைந்து இப்படத்தின் வசனங்களை எழுதியுள்ள படத்தின் ஹீரோ சித்துவை, அதன் டபுள் மீனிங் தன்மைக்காக பலரும் வசைபாடி வருகின்றனர்.  இந்தப் படம் வெளியான பிறகு, படத்தின் மூன்றாம் பாகத்தை அடுத்து எடுக்கயிருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். ஆனால், தில்லு 3யின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.

வரவிருக்கும் படைப்பு:

சித்து ஜொன்னலகட்டாவுக்கு ஜாக், தெலுசு காதா உட்பட ஏராளமான படங்கள் கையில் உள்ளன. இந்த சூட்டிங்கில் சித்து பிஸியாக இருக்கிறார். அதன்பின், தனது நண்பரும் ஒப்பனையாளருமான நீரஜா கோனாவின் முதல் படத்திலும் ஹீரோவாக நடிக்கவுள்ளார். 

 அனுபாமா பரமேஸ்வரன், தற்போது நடிகர் சுரேஷ் கோபியுடன், ஜே.எஸ்.கே ட்ரூத் ஷெல் ஆல்வேஸ் பிரிவெயில் என்னும் மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் புதிய படத்தில் அனுபாமாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், அனுபாமா தமிழிலும் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்