Manivannan: ‘மனதார போற்றப்பட வேண்டிய கலைஞன்’ மணிவண்ணன் என்கிற மகா கலைஞன்!
‘20 ஆண்டு கால தீவிர நடிப்பு வாழ்க்கையில் ஒரு படத்தில் கூட அவரது நடிப்பு சோடை போனது கிடையாது’

'அமைதிப்படை' அமாவாசைன்னா இன்னைக்கு வரை சத்யராஜ் பெயர்தான் எல்லோர் நினைவுக்கும் வரும். ஆனா, அதுக்கு பின்னால முன்னால பக்கத்திலன்னு எல்லா பக்கமும் இருந்த ஒரே ஆளு மணிவண்ணன் தான். ரெண்டு பேருமே ஆரம்ப கால நண்பர்கள்.
1979ல் பாரதிராஜாகிட்ட கதாசிரியரா, அசிஸ்டண்ட் இயக்குநரா உதவியாளரா சேர்ந்து 'அலைகள் ஓய்வதில்லை' மாதிரி சில படங்கள் எல்லாம் பண்ணிட்டு முதன் முதலா 1982ல் மணி வண்ணன் தனியா இயக்கிய படம் 'கோபுரங்கள் சாய்வதில்லை'. மோகன், சுகாசினி, ராதா நடிச்ச அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்.
அதுக்கு அப்புறம் 'இளமை காலங்கள்', 'நூறாவது நாள்', '24 மணி நேரம்', 'விடிஞ்சா கல்யாணம்', 'சின்னத் தம்பி பெரிய தம்பி', 'முதல் வசந்தம்', 'பாலைவன ரோஜாக்கள்', 'ஜல்லிக்கட்டு', 'கனம் கோர்ட்டார் அவர்களே', 'முதல் வசந்தம்', 'புது மனிதன்,' 'தெற்கு தெரு மச்சான்'-ன்னு மணிவண்ணன் இயக்குன படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்.