Goat Movie : கோட் படத்தில் அஜித் வரும் சீன்.. இரு விஜய் மோதும் சண்டை காட்சி.. மாஸ் பண்ணிய மங்கத்தா பிஜிஎம்!
Thala Ajith On Goat Movie : மங்காத்தா பிஜிஎம் வரும் போது, தளபதி ரசிகர்கள், ஆர்ப்பரித்தனர். தல-தளபதி சண்டைகள் இல்லாமல் படத்தை படமாக பார்ப்பதை பார்க்க முடிந்தது.
Goat Movie : கோட் படத்தில் நடிகர் அஜித்தின் கேமியோ இருக்கிறது, கிளைமாக்சில் அஜித்தின் வாய்ஸ் ஓவர் வருகிறது, விஜயும் அஜித்தும் இணைந்து ஒரு காட்சியில் வருகிறார்கள், கோட் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியானது மங்காத்தா படத்தோடு கனெக்ட் ஆகிறது என்ற ரீதியில் தகவல்கள் வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் படத்தில் உண்மையில் இருப்பது என்ன என்பதை இங்கு பார்க்கலாம். கோட் படத்தில் அஜித் கேமியோ ரோலிலோ, வாய்ஸ் ஓவர் வழியாகவோ வரவில்லை. காந்தி கதாபாத்திரத்திற்கும், அவரது மகனான ஜீவன் கதாபாத்திரத்திற்கும் இடையே சண்டை நடந்து கொண்டிருக்கும்.
சண்டையில் தோன்றும் அஜித்
அந்த சண்டையில் ஒரு பொருளானது ஜீவன் கதாபாத்திரத்திற்கு தேவைப்படும். அந்தப் பொருள் காந்தி கதாபாத்திரத்திடம் இருக்கும். ஆனால், அதை காந்தி கதாபாத்திரம் ஜீவன் கதாபாத்திரத்திற்கு கொடுக்காது. அதை ஜீவன் கதாபாத்திரம் வாங்குவதற்காக தன்னுடைய தங்கை என்றும் பாராமல், அவளை கொலை செய்ய அவளின் தலைப்பக்கத்தில் கம்பு போன்ற ஒன்றை வைத்து, காந்தி கதாபாத்திரத்திடம் இருக்கும் பொருளை கேட்டு மிரட்டிக் கொண்டிருக்கும். அதிலிருந்து மகளை சற்று விலக்குவதற்காக காந்தி கதாபாத்திரம் நீ யாருடைய ரசிகை என்று கேட்கும்.
அதற்கு மகள் ‘தல’யேரசிகை என்று சொல்லி, தலையை சற்று அகற்றுவாள். அப்படி மகள் சொல்லும் பொழுது பின்னணியில் மங்காத்தா படத்தின் பின்னணி இசையானது சில நொடிகள் ஒலிக்கும். அது மட்டுமே அஜித்தின் ரெஃப்ரன்ஸ்க்காக கோட் படத்தில் இடம் பெற்றிருக்கும் காட்சி ஆகும். இருந்தாலும் மங்காத்தா பிஜிஎம் வரும் போது, தளபதி ரசிகர்கள், ஆர்ப்பரித்தனர். தல-தளபதி சண்டைகள் இல்லாமல் படத்தை படமாக பார்ப்பதை பார்க்க முடிந்தது.
இதுவரை உலா வந்தவை இது தான்
அஜித் குமாரின் இந்த பிஜிஎம் சீன் தான், இதுநாள் வரை கிளப்பிவிடப்பட்ட பல்வேறு யூகங்களுக்கான விடையாகும்.
தியேட்டர்களில் இன்று தளபதி ரசிகர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்க காரணம், தி கோட் படத்தில் இடம் பெற்றுள்ள பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் தான். நிறைய கதாபாத்திரங்கள், படத்தில் இணைகின்றன. கெளரவ தோற்றத்தில் வந்து செல்கின்றன. அவையெல்லாம் நம்மோடு கனெக்ட் ஆகின்றன. படத்தை பார்க்கும் போது, ரசிகனாக அதை உங்களால் உணர முடியும் என்று பெரும்பாலான ரசிகர்கள் கூறுகின்றனர். பின்னணியில் கொஞ்சம் பின்னடைவு இருந்தாலும், திரைக்கதையாக வெங்கட்பிரபு, முடிந்தவரை நியாயம் செய்ய முயன்றிருக்கிறார்.
சினிமா தொடர்பான மேலும் சுவாரஸ்யமான செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். மேலும், எங்களின் சமூக வலைதள பக்கங்கள் மூலம், எங்களை பின் தொடர்ந்து அப்டேட் செய்திகளை உடனுக்குடன் பெறலாம்.