தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Thalapathy 67 Lokesh Kanagaraj Vijay Trisha Kashmir Schedule Begins Airport Video Goes Viral On Social Media

Thalapathy 67: டைட்டில் இதுதானமே? கேமராமேனாக மாறிய விஜய்.. வைரலாகும் வீடியோ!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 03, 2023 01:29 PM IST

தளபதி 67 குழு தனி விமானத்தில் காஷ்மீர் செல்லும் வீடியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

தளபதி 67 வீடியோ
தளபதி 67 வீடியோ

ட்ரெண்டிங் செய்திகள்

விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சம் தொட்டு இருக்கும் நிலையில், படத்தின் அப்டேட் பிப்ரவரி 1,2,3 ஆகிய தேதிகளில் வெளியாகும் என்று லோகேஷ் முன்னதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அண்மையில் இந்தப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதில் விஜயுடன் லோகேஷ் கனகராஜ் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு, படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும், ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சாவும், இசையமைப்பாளராக அனிருத்தும் பணியாற்ற இருப்பதாகவும் குறிப்பிட்டு, படக்குழுவின் இதர விபரங்களும் இணைக்கப்பட்டு இருந்தது.

தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் படத்தில் கெளதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த் ஆகியோர் நடிக்க இருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு விஜயுடன் நடிகை த்ரிஷா இணைய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் படத்தின் பூஜை வீடியோவும் வெளியானது.

அடுத்தடுத்த அப்டேட்டுகளால் திக்குமுக்காடி போன விஜய் ரசிகர்களுக்கு, அடுத்த அப்டேட்டாக இன்று படத்தில் டைட்டில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டைட்டில் குருதி அல்லது குருதிப்புனலாக இருக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

 

 

அதனை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், சர்ப்ரைஸாக அண்மையில் காஷ்மீரில் நடக்கும் படப்பிடிப்பிற்காக படக்குழு சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்த வீடியோ வெளியிட்டு இருக்கிறது அந்தப்படத்தின் தயாரிப்பு நிறுவனம். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்