தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Retta Thala:‘’‘தல’ங்கிறது தமிழ்நாட்டில் பவர்ஃபுல்லான வார்த்தை’’ - ‘ரெட்ட தல’ படத்தில் நடிக்கும் அருண் விஜய் ஓபன் டாக்

Retta Thala:‘’‘தல’ங்கிறது தமிழ்நாட்டில் பவர்ஃபுல்லான வார்த்தை’’ - ‘ரெட்ட தல’ படத்தில் நடிக்கும் அருண் விஜய் ஓபன் டாக்

Marimuthu M HT Tamil
Apr 24, 2024 08:41 AM IST

Retta Thala: ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானபின், படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

‘’‘தல’ங்கிறது தமிழ்நாட்டில் பவர்ஃபுல்லான வார்த்தை’’ -  ‘ரெட்ட தல’ படத்தில் நடிக்கும் அருண் விஜய் ஓபன் டாக்
‘’‘தல’ங்கிறது தமிழ்நாட்டில் பவர்ஃபுல்லான வார்த்தை’’ - ‘ரெட்ட தல’ படத்தில் நடிக்கும் அருண் விஜய் ஓபன் டாக்

ட்ரெண்டிங் செய்திகள்

அப்போது பேசிய படத்தின் ஹீரோ நடிகர் அருண் விஜய்  படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். அவையாவன, ‘’நாங்கள் எல்லோருமே தல அப்படிங்கிற டைட்டில் கேட்டதும் அவ்வளவு எக்ஸைட்மென்ட் ஆனோம். நீங்க சொன்னமாதிரி தலங்கிறது சம்திங். தமிழ்நாட்டில் தல என்பது பவர்ஃபுல்லான வார்த்தை. இந்தக் கதைக்கு இந்த டைட்டில் மிகவும் தேவைப்பட்டது. இந்த இரண்டு கேரக்டருமே அப்படி அமைச்சிருக்கார், இயக்குநர் திருக்குமரன் சார். நிறைய வொர்க் பண்ண வேண்டியிருந்தது. ஃபர்ஸ்ட் லுக்கில் பார்க்கும்போதே அது உங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு விஷயத்துக்கும் இந்தப் படத்தில் மெனக்கெடல்கள் இருக்கு. என்னோட ஃபெர்மான்ஸில் சரி. அது எனக்கு சவாலானது தான். திருக்குமரன் சாரோட இன்வால்வ்மென்ட் படத்தோட போட்டோஷூட்டிலேயே தெரிஞ்சது. நிச்சயமாக இது ஒரு நல்ல அனுபவம்னு நினைக்கிறேன். நான் இந்தப் படத்துக்காக காத்திருக்கிறேன். வரக்கூடிய ஏப்ரல் 29ஆம் தேதி இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்தப் படத்தின் டைட்டிலுக்கு உண்மைசேர்க்கும் வகையில் நாங்கள் உழைப்போம். இந்த டைட்டிலை வெகுநாட்களாகப் பதிவுசெய்துவைத்திருந்த ஏ.ஆர். முருகதாஸுக்கு நன்றி.

இந்த டைட்டில் படத்துக்கான டைட்டில். படம் பார்க்கும்போது அது தெரியும். ஒரு கட்டத்துக்கு அப்புறம், தல அஜித்குமார் சாரோட ஃபேன்ஸ் எனக்கு ஆதரவு கொடுக்க ஆரம்பித்தார்கள். தவிர, அனைத்து ஹீரோக்களின் ரசிகர்களுமே என்னை ஆதரிக்க ஆரம்பிச்சாங்க. எல்லா பேன்ஸும் இல்லைன்னா, நான் இங்கு இல்லை. இங்கு நான் இருக்கிறது எல்லாரையும் என்டெர்யின் பண்றதுக்கு. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமா எப்படி என்டெர்டெயின் பண்ணலாம்ங்கிறதை நான் பண்ணிட்டு இருக்கேன். அதற்கான உழைப்பினை எல்லா படத்திலும் நான் கொடுக்கிறேன். இந்தப் படத்திலும் அதை கொடுப்பேன்.

இந்தப் படத்துக்குண்டான ஃபர்ஸ்ட் லுக், ஒரு ரோமன் பெயின்டிங்கில் இருந்து தான் இன்ஸ்பெயரிங் ஆனார். ரெண்டு மிருகங்கள் சண்டைபோடுற மாதிரி இருக்கணும்னு இயக்குநர் சொன்னார். அதைத்தான் படமா எடுத்திருக்கோம்.

இந்தக் கதையை திருக்குமரன் சார் வந்து என்னிடம் சொல்லும்போதே பயங்கர எக்ஸைட்மென்ட்யாக இருந்தது. என்னுடைய பயணத்தில் நான் எப்படி கதை கேட்பேன் என்றால் ரசிகர்களுடைய மனநிலையில் இருந்து கேட்பேன். ரசிகர்களுக்குப் பிடிக்கும் என நினைத்தபின், தான் என் கேரக்டரையே பார்ப்பேன். தடம் படத்துக்கு அப்புறம், நான் இரட்டை வேடங்களில் இந்தப் படத்தில் நடிக்கிறேன். மனோஜ் அண்ணா, இந்தப் படத்தின் டைட்டிலை சொல்லும்போதே, ரொம்ப சரியாக தோணுச்சு. வித்தியாசமாக செய்யக்கூடிய இயக்குநர்களிடம் ஒர்க் பண்றது எனக்கு மிகவும் பிடிக்கும். இயக்குநர் திருக்குமரன் சார், எதிர்பார்த்ததை விட நன்றாக நடிக்கணும்னு நினைக்கிறேன். படத்தின் துவக்கமே நல்லபடியாக அமைஞ்சிருக்கு. படத்தின் ஹீரோயின்களான சித்தி, தான்யாவுக்கு நன்றி. எங்களது படக்குழுவினருக்கு நன்றி. ஆண்டனி சாரின் எடிட்டிங்கால் தான், என்னை அறிந்தால் படத்தில் நான் ஓடி வரும் காட்சி பிரமாண்டமாகப் பேசப்பட்டது. சாம்.சி.எஸ். பிரதருக்கு இசை அமைக்க தீனி போடும் படமாக இது இருக்கும். ரெட்ட தல அனைவருக்கும் பெருமை சேர்க்கும்படமாக இருக்கும்''என்றார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்