Arun Vijay: தாயார் பற்றி அவதூறு கருத்துகள்! பிரபல யூடியூப் சேனல் மீது அருண் விஜய் புகார்
தன்னை பற்றியும், குடும்பத்தினர், தாயார் பற்றியும் அவதூறு செய்தி பரப்பிய பிரபல யூடியூப் சேனல் மீது நடிகர் அருண் விஜய் புகார் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய். இவரும் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உள்ளார்.
இதையடுத்து அருண் விஜய் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தன்னை பற்றியும் தனது குடும்பத்தினர் பற்றியும் பிரபல யூடியூப் சேனல் ஒன்று அவதூறு செய்திகளை வெளியிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல செய்தித்தாள் ஒன்று நடிககைகள் பற்றி அருவருக்கத்தக்க வகையில் செய்தி வெளியிட்டது. அதில் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியும், மறைந்த நடிகையுமான மஞ்சுளா பற்றியும் தெரிவித்திருந்தது. இந்த விவகாரம் அப்போது கடுமையான எதிர்ப்புகளை சந்தித்தது.
இதையடுத்து தற்போது யூடியூப்பில் வெளியிடப்படும் தகவல் தனது வளர்ப்பு தாய் மஞ்சுளா பற்றி மட்டுமல்லாமல், தன்னை பெற்றெடுத்த தாய் தொடர்பாகவும் இணைத்து பேசப்படுகிறது. இதுதொடர்பாக அந்த யூடியூப் சேனல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
அருண் விஜய்யின் இந்த புகார் தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அருண் விஜய்யின் தந்தை விஜயகுமார் முத்துக்கண்ணும் என்பவரை 1969இல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கும் கவிதா, அனிதா, அருண் விஜய் ஆகியோர் பிறந்தனர். இதைத்தொடர்ந்து 1976இல் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார் விஜயகுமார். இதன் பின்னர் இவர்களுக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீ தேவி என மூன்று பெண் குழந்தைகள் பிறந்தார்கள்.
2013இல் மஞ்சள்காமாலை நோய் பாதிக்கப்பட்ட மஞ்சுளா உயிரிழந்தார். சமீபத்தில் பிரபல யூடியூப் சேனல் ஒன்று விஜயகுமார் அவரது முன்னாள் மனைவிகள் பற்றி அவதூறு தகவலை வெளியிட்டிருந்தது. இதை எதிர்த்து அருண் விஜய் புகார் அளித்துள்ளார்.
அருண் விஜய் இந்த ஆண்டில் பொங்கல் வெளியீடாக மிஷன் சேப்டர் 1 படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார் அருண் விஜய். இந்த படத்தின் கடந்த சில நாள்களுக்கு முன் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்