தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Chiranjeevi - Ajith: பழசை மறக்காத அஜித்.. மகிழ்ந்தேன்.. நேரில் வந்து பார்த்த அஜித்தை புகழ்ந்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி

Chiranjeevi - Ajith: பழசை மறக்காத அஜித்.. மகிழ்ந்தேன்.. நேரில் வந்து பார்த்த அஜித்தை புகழ்ந்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி

Marimuthu M HT Tamil
May 29, 2024 07:58 PM IST

Chiranjeevi - Ajith:தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியை நேரில் சென்று அஜித் குமார் பார்த்து பழைய நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். பழசை மறக்காமல் இருக்கும் அஜித்தின் குணத்தை, சிரஞ்சீவி வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

Chiranjeevi & Ajith: பழசை மறக்காத அஜித்.. மகிழ்ந்தேன்.. நேரில் வந்து பார்த்த அஜித்தை புகழ்ந்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி
Chiranjeevi & Ajith: பழசை மறக்காத அஜித்.. மகிழ்ந்தேன்.. நேரில் வந்து பார்த்த அஜித்தை புகழ்ந்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகர் அஜித் குமார் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இந்நிலையில், ’விஸ்வாம்பரா’ என்னும் சிரஞ்சீவி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு, அதே ராமோஜி ஃபிலிம் சிட்டியில், அவரது படப்பிடிப்பு நடிக்கும் இடத்தின் அருகிலேயே நடந்து கொண்டு இருந்திருக்கிறது. 

அப்போது அவரை தேடிப்போய் பார்த்து நலம் விசாரித்துள்ளார், நடிகர் அஜித் குமார். மேலும் திரையுலகில் தனது முதல் படமான ‘பிரேம புஸ்தகம்’ படத்தின் ஆடியோ லாஞ்சில், பங்கேற்று வாழ்த்திய சிரஞ்சீவி குறித்த நினைவுகளைப் பகிர்ந்தும்,  தனது மனைவி ஷாலினி குழந்தை நட்சத்திரமாக சிரஞ்சீவியுடன் நடித்த அனுபவங்களையும் பழைய நினைவுகள் பொங்க மகிழ்ச்சியுடன் சிரஞ்சீவியிடம் பகிர்ந்துள்ளார், நடிகர் அஜித் குமார். இதனால், தெலுங்கு உலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பழையதை மறக்காத அஜித்தின் குணத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார். 

அப்போது எடுக்கப்பட்ட படங்களை சிரஞ்சீவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, அஜித்தை பாராட்டியுள்ளார். 

'நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்'

சிரஞ்சீவி பகிர்ந்த படங்களில், அவர் ஒரு டி-ஷர்ட் மற்றும் அதன் வெளியே கருப்பு வண்ண சட்டை அணிந்தும், தங்க சங்கிலி ஒன்றினைப் போட்டும் இருக்கிறார். இது தான் விஸ்வாம்பரா படத்தில் அவரது தோற்றம் எனப் புரிந்துகொள்ள முடிகிறது. அஜித்,  எப்போதும்போல் மிகவும் எளிமையான தோற்றத்தில் இருக்கிறார். 

அஜித் குறித்தான சந்திப்பு குறித்து சிரஞ்சீவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியுள்ளதாவது,"நேற்று மாலை ’’விஸ்வாம்பரா’’ படப்பிடிப்புத் தளத்துக்கு சர்ப்ரைஸாக ஸ்டார் விருந்தினர் ஒருவர் வந்திருந்தார். எங்களது பக்கத்து படப்பிடிப்புத் தளத்தில் படப்பிடிப்பில் இருந்த மிகவும் பாசமான அஜித் குமார் வந்து எங்களைப் பார்த்தார். சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். அவரது முதல் படமான 'பிரேம புஸ்தகம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் கலந்துகொண்டு, இசைத்தட்டினை வெளியிட்டேன். அதை அஜித் அன்புடன் நினைவு கூர்ந்தார். 

எனது 'ஜகதேகவீருடு அதிலோகசுந்தரி' படத்தில், அஜித்தின் மனைவி ஷாலினி, நான் வளர்க்கும் அன்பான குழந்தைகளில் ஒருவராக நடித்திருந்தார். அவருடன் போற்றிப் பாதுகாக்க ஏராளமான நினைவுகள் இருந்தன என்பது தெளிவாகத் தெரிந்தது. பல ஆண்டுகளாக அஜித் அடைந்த நட்சத்திர அந்தஸ்தின் உச்சம் பெரியது. ஆனால், பழையதை மறக்காத அஜித் இதயத்தில் ஒரு அழகான ஆத்மாவாக இருப்பதையும் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்!"எனக் குறிப்பிட்டு, அஜித்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார், சிரஞ்சீவி. 

சிரஞ்சீவியின் 1990ஆம் ஆண்டு வெற்றிப் படமான ’’ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி’’ படத்தில் அஜித்தின் மனைவி ஷாலினி குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலை முடிந்து பைக்கில் செல்வதில் ஆர்வம் கொண்ட அஜித்!

 அடிக்கடி சக இருசக்கர வாகன ஆர்வலர்களுடன் பைக்கில் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் பழக்கம் கொண்டவர், நடிகர் அஜித் குமார். இவர் சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு முடிந்து, ஹைதராபாத் நகரின் மையப்பகுதியில் இருக்கும் தனது ஹோட்டல் அறைக்கு சவாரி செய்வதை ரசிகர்கள் பார்த்து வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவும் வைரல் ஆகி வருகிறது. 

பைக்கில் நீண்ட தூரம் பயணிப்பவர்கள் அணியும் ஜாக்கெட் மற்றும் ஹெல்மெட் அணிந்து, அஜித் ஹைதராபாத்தின் போக்குவரத்து நெரிசலில் சவாரி செய்வதை அந்த வீடியோவில் காண முடிந்தது. அவரைக் கண்ட ரசிகர்கள் ஹோட்டலை அடையும் வரை, அவரைப் பின்தொடர்ந்து வீடியோ எடுத்தனர். ஹைதராபாத்தில் இருக்கும்போது நடிகர் அஜித் குமார், சூட்டிங்கிற்கு சவாரி செய்வதையும் திரும்பி வருவதையும் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். 

சிரஞ்சீவி மற்றும் அஜித்தின் வரவிருக்கும் படங்கள் பற்றி:

’விஸ்வாம்பரா’ படத்தில் சிரஞ்சீவியுடன் த்ரிஷா கிருஷ்ணன், மீனாட்சி சவுத்ரி மற்றும் ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தை மல்லிடி வசிஷ்டா இயக்கி வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி சங்கராந்தி பண்டிகையை ஒட்டி வெளியாகவுள்ளது. 

நடிகர் அஜித் தற்போது ஹைதராபாத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படப்பிடிப்பில் நடித்து வருகிறார். அவர் முன்னதாக, மகிழ்திருமேனி இயக்கத்தில் த்ரிஷாவுடன் சேர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து முடித்துவிட்டார். இரண்டு படங்களுக்குமான ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்