Telugu Actor Sunil: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருமுடி கட்டி நடிகர் சுனில் சாமி தரிசனம்!-telugu actor sunil swamy dharsan in sabarimal ayyappan temple - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Telugu Actor Sunil: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருமுடி கட்டி நடிகர் சுனில் சாமி தரிசனம்!

Telugu Actor Sunil: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருமுடி கட்டி நடிகர் சுனில் சாமி தரிசனம்!

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 06, 2024 08:30 PM IST

விரதமிருந்து, இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்ற தெலுங்கு நடிகர் சுனில் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்துள்ளார்.

சபரிமலை கோயிலில் இருமுடியுடன் நடிகர் சுனில்
சபரிமலை கோயிலில் இருமுடியுடன் நடிகர் சுனில்

முன்னதாக, மாலை அணிந்து விரதமிருந்த சுனில், ஜனவரி 5ஆம் தேதி இருமுடி கட்டி சபரிமலை சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்துள்ளார்.

இவரை போல் இன்னும் சில சினிமா பிரபலங்களும் கடந்த நவமபர், டிசம்பர் மாதங்களில் ஐயப்பன் கோயில் சென்று சாமி தரிசனம் செய்தனர். வரும் 15ஆம் தேதி மாலை மகர ஜோதி தரிசனம் நடைபெற இருக்கும் நிலையில், அன்றைய நாளி சுவாமி ஐயப்பனை தரிசிப்பதற்காக ஏரளமான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை புரிவார்கள்.

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து 41 நாள்கள் கழித்து மூடப்பட்டு மீண்டும் டிசம்பர் 29ஆம் தேதி திறக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து விரதமிருந்து சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களின் வருகையும் அதிகரிக்க தொடங்கியது.

வரும் 19ஆம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜைகள் நடைபெறவுள்ளன. ஜனவரி 20ஆம் தேதி பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்துக்கு பின் கோயில் நடை அடைக்கப்படும்.

காமெடி நடிகரான சுனில் தற்போது வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இந்த ஆண்டில் சுனில் நடிப்பில் புஷ்பா 2, கேம் சேஞ்சர், குண்டூர் காரம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்களாக உள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.