TAMIL SERIAL ACTRESS: அழகான தோற்றம்..கிளாசிக்கல் டான்சர்! சைலண்ட் வில்லியாக மனதை கவர்ந்த பிருந்தா தாஸ்
Tamil Serial Actress Brinda Das: குடும்பாங்கான அழகான தோற்றம், சிரித்த முகம் என்று இருந்தாலும் சைலண்ட் வில்லியாக ஆனந்தம் சீரியலில் தோன்றி மனதை கவர்ந்தவர் நடிகை பிருந்தா தாஸ். இப்போது கார்ப்பரேட் ஊழியராக இருந்து வரும் இவர் அடிப்படையில் கிளாசிக்கல் டான்சர்.

தமிழ் சீரியல்களில் மறக்க முடியாத நடிகைகளில் முக்கியமானவர் நடிகை பிருந்தா தாஸ். ஒரு சில படங்களிலும் இவர் நடித்திருந்தாலும் சன்டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் வில்லியாக தோன்றி ரசிகர்கள் மனதில் தனக்கென தனியொரு இடத்தையும் பிடித்தார். அதேபோல் வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்கள் உள்பட சில படங்களிலும் சிறு வேடங்களில் நடித்துள்ளார்.
சின்னத்திரை பயணம்
சிரித்த முகம், மூக்குத்தி குத்தியவாறு குடும்ப பாங்கான தோற்றம், என பிருந்தா தாஸ் இளைஞர்கள், பெண்கள் என அனைவரையும் கவர்ந்த முகமாக இருந்தார். அடிப்படையில் கிளாசிக்கல் டான்சரான பிருந்த தாஸ், கல்லூரிகளில் பல்வேறு நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். பரதநாட்டியம், மோகினி ஆட்டம் ஆகியவற்றில் தேர்ந்தவரான பிருந்த தாஸ் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ளார். இதன் மூலம் நடிப்பு வாய்ப்பு கிடைக்க அதன் மூலம் நடிகையாகியுள்ளார்.
டிடியில் ஒளிபரப்பான நம் குடும்பம் தான் இவர் நடித்த முதல் தொடர். எஸ்வி சேகர் காமெடி தொடர்களிலும் நடித்துள்ளார். இதன் பின்னர் 20க்கும் மேற்பட்ட டிவி தொடர்களில் நடித்திருக்கும் பிருந்த தாஸ், டப்பிங் கலைஞராகவும் இருந்துள்ளார். பல்வேறு மேடை நாடகங்களிலும் தோன்றியுள்ளார்.