Ajith AR Murugadoss: கஜினியாய் மாற வேண்டிய அஜித்; நன்றி மறந்த முருகதாஸ்;பிளவை ஏற்படுத்திய மெல்லியக்கோடு! -நடந்தது என்ன?
தீனா திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித்தும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸூம் ஏன் இணையவில்லை என்பது குறித்து வலைப்பேச்சு அந்தணன் பேசியிருக்கிறார்.
இது குறித்து அறம் நாடு யூடியூப் சேனலுக்கு பேசியிருக்கும் அவர், “தீனா திரைப்படத்திற்கு பிறகு அஜித்தும், ஏ.ஆர்.முருகதாஸூம் மீண்டும் இணைய திட்டமிடப்பட்டது. சூர்யாவை வைத்து கஜினி என்று பின்னாளில் வந்த திரைப்படத்தின் கதைதான் அந்தக்கதையாக இருந்தது.
அந்தத்திரைப்படத்திற்கு மிரட்டல் என பெயர் வைக்கப்பட்டு இருந்தது. தயாரிப்பாளர் எஸ்.எஸ். சக்ரவர்த்திதான் அந்தப்படத்தின் தயாரிப்பாளர். படம் ஆரம்பித்து மூன்று நாட்கள் ஷூட்டிங்கும் நடந்து விட்டது. அதன் பின்னர், எஸ்.எஸ். சக்ரவர்த்திக்கும், அஜித்திற்கும் இடையே ஒரு சின்ன பிரச்சினை ஏற்பட்டு விட்டது.
அப்போது அஜித், ஏ.ஆர்.முருகதாஸிடம் நீ என்னுடன் வந்து விடு.. நாம் இந்தக்கதையை வேறொரு தயாரிப்பாளரை வைத்து எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார். அவரிடம் முருகதாஸ் சரி சரி என்று சொல்லிவிட்டு, இந்த விஷயத்தை சக்ரவர்த்தியிடம் சொல்ல, அவரோ முருகதாஸிடம், நான் உனக்கு படம் தருகிறேன் நீ என் பக்கம் நில் என்று சொல்லி பிடித்து வைத்துக்கொண்டார்.
இதில் அஜித்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் மீது மிகப்பெரிய கோபம் ஏற்பட்டு விட்டது. அதனைத்தொடர்ந்து அந்தப்படமும் கைவிடப்பட்டது. இதனையடுத்து முருகதாஸ் எங்கெங்கேயோ சென்று கதை சொல்லுகிறார். ஆனால் யாரும் அந்தக்கதையை ஒத்துக்கொள்ளவில்லை. இறுதியாக, சூர்யாவிடம் அந்தக்கதை சொல்ல, அவருக்கு கதை பிடித்து விட்டது. அதனைத்தொடர்ந்துதான் அந்தக்கதை படமானது” என்று பேசினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்