தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nadigar Sangam: நாசர் பெயரில் நிதி வசூல்.. காவல் நிலையத்தில் நடிகர் சங்கர் பரபரப்பு புகார்!

Nadigar Sangam: நாசர் பெயரில் நிதி வசூல்.. காவல் நிலையத்தில் நடிகர் சங்கர் பரபரப்பு புகார்!

Aarthi Balaji HT Tamil
Apr 30, 2024 10:37 AM IST

Nadigar Sangam: நடிகர் சங்க கட்டிடம் நிதி தொடர்பாக சிலர் நடிகர் நாசர் பெயரில் போலியாக பணம் வசூலித்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளது.

நாசர்
நாசர்

ட்ரெண்டிங் செய்திகள்

இதற்கான நிதியை நடிகர், நடிகைகள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ. 1 கோடி நிதி வழங்கினார். அவரைத் தொடர்ந்து, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் ரூ. 1 கோடிக்கான காசோலையை நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன் ஆகியோரிடம் வழங்கினார்.

அவரைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடப் பணிகளுக்காக ரூ. 1 கோடி நிதியுதவி அளித்து உள்ளார். மேலும் நடிகர் தனது சொந்த நிதியில் இருந்து நடிகர் சிவகார்த்திகேயன் 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்து உள்ளார். நேற்று நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக, நடிகர் நெப்போலியன் ரூ. 1 கோடி நிதியுதவி அளித்து இருந்தார்.

காவல் நிலையத்தில் புகார் : 

நடிகர் சங்க கட்டிடம் நிதி தொடர்பாக சிலர் நடிகர் நாசர் பெயரில் போலியாக பணம் வசூலித்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளது.

அதில், “ நேற்று ( 29.04.2024 ) தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டுவது சம்பந்தமாக தலைவர் நாசர் அவர்கள் பெயரில் சில விஷமிகள் அவர்களது முகநூல் மற்றும் எக்ஸ் தளத்தில் போலியாக விளம்பரபடுத்தி பொது மக்கள் பார்வையில் சங்கத்தின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் போலியான விளம்பரம் கொடுத்த நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அவர்களிடமும், காவல் ஆய்வாளர், சைபர்க்ரைம், பரங்கிமலை அவர்களிடமும் புகார்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 

நடிகர் சங்க நிர்வாகிகள் :

தென்னிந்திய நடிகர் சங்கம் 1952 ஆம் ஆண்டு முதல் சென்னையில் இயங்கி வருகிறது. இதன் தற்போதைய தலைவராக நாசர் செயல்பட்டு வருகிறார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தி சிவகுமாரும் பொறுப்பு வகித்து வருகின்றனர்.

அந்த விஷகிருமிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தகுந்த விசாரணை நடைப்பெற்று வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். எனவே அந்த உண்மைக்கு மாறான பொய்யான விளம்பரங்களை யாரும் நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறோம் " எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்