RIP Bonda Mani: சாவிடம் போராடி மீண்ட போண்டா மணி.. திடீர் மரணம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rip Bonda Mani: சாவிடம் போராடி மீண்ட போண்டா மணி.. திடீர் மரணம்!

RIP Bonda Mani: சாவிடம் போராடி மீண்ட போண்டா மணி.. திடீர் மரணம்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Dec 24, 2023 03:09 AM IST

Bonda Mani passed away: மறைந்த போண்டா மணி, இதுவரை 175க்கும் மேற்பட்ட திரைப்படங்களில நடித்திருக்கிறார்.

நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்.
நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்.

நடிகர் வடிவேலு உள்ளிட்ட முக்கிய நகைச்சுவை நடிகர்களுடன் துணை கதாபாத்திரமாக நடித்தவர் போண்டா மணி. பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருந்த போண்டா மணி, படப்பிடிப்பின் போது சாக்கடையில் விழுந்ததில், கழிவுநீரை பருகும் சூழல் உருவானது. 

இதனால் அவரது இரு சிறுநீரகங்களுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, கடந்த சில மாதங்களுக்கு முன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் போண்டா மணி. அவருக்கு சில சினிமா நட்சத்திரங்கள் நிதி உதவி அளித்த நிலையில், கடுமையான போராட்டத்திற்கு பின், போண்டா மணி மீண்டு வந்தார். 

நீண்ட ஓய்வுக்குப் பின் தேறி வந்த போண்டா மணி, அதன் பின் மீண்டும் தன்னுடைய பிழைப்பை தேட ஆரம்பித்தார். இருப்பினும் அவரது உடல்நிலை பலவீனமாக இருந்தது. இருப்பினும் குடும்ப சூழலுக்காக வாய்ப்புகளை தேடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று சென்னை பொழிச்சலூரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்த போண்டா மணி, திடீரென மயங்கி விழுந்தார். 

பதறிப் போன குடும்பத்தார் உடனடியாக அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவரது இரு சிறுநீரகங்களும செயல் இழந்ததாகவும், அதன் காரணமாக ஏற்கனவே உயிர் பிரிந்ததாகவும் தெரிவித்தனர்.

மறைந்த போண்டா மணி, இதுவரை 175க்கும் மேற்பட்ட திரைப்படங்களில நடித்திருக்கிறார். அவரது வீட்டில் திரையுலகினர் அஞ்சலி செலுத்தஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சாவிலிருந்து கடுமையாக போராடி மீண்டு வந்த போண்டா மணி, திடீரென உயிரிழந்த சம்பவம் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.