Jiiva Accident: மனைவியுடன் காரில் சென்றபோது ஹைவேயில் நடந்த விபத்து..பொறுமை இழந்து திட்டிய ஜீவா! போலீசில் புகார்
Jiiva Accident: சேலத்தில் இருந்து சென்னைக்கு மனைவியுடன் காரில் சென்றபோது ஹைவேயில் நடிகர் ஜீவா விபத்தில் சிக்கியுள்ளார். விபத்தை ஏற்படுத்த காரணமாக இருந்த வாகன ஓட்டி மீது ஜீவா புகார் அளித்துள்ளார். விபத்தின் நடத்த இடத்தில் பொறுமை இழந்த நடிகர் ஜீவா ஒருவரை திட்டிய விடியோ வெளியாகியுள்ளது.

Jiiva Accident: மனைவியுடன் காரில் சென்றபோது ஹைவேயில் நடந்த விபத்து..பொறுமை இழந்து திட்டிய ஜீவா! போலீசில் புகார்
தமிழ் சினிமாவின் ஹீரோவாக இருந்து வரும் ஜீவா தனது மனைவி சுப்ரியாவுடன் இணைந்து சேலத்தில் இருந்து சென்னைக்கு காரில் வந்துள்ளார். அப்போது கள்ளக்குறிச்சி பகுதி அருகே அமையாகரம் என்ற இடத்தில் ஜீவா பயணித்த கார் விபத்தில் சிக்கியது. இதில் அவரது கார் முன் பகுதி பலத்த சேதமடைந்தது.
இந்த விபத்தில் ஜீவா, அவரது மனைவிக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
ஜீவா போலீசில் புகார்
ஜீவா பயணித்த கார் முன்னே இருசக்கர வாகனம் ஒன்று குறுக்கே வந்ததுள்ளதாக கூறப்படுகிறது. அதில் மோதாமல் இருக்க ஜீவா தனது காரை திருப்பியுள்ளார். அப்போது கார் சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.