தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Tamil Actor Daniel Balaji Passes Away Heart Attack Rip Daniel Balaji He Is Actor Murali Brother

Daniel Balaji Passes Away: ‘மீண்டும் ஒரு இழப்பு’ டேனியல் பாலாஜி காலமானார்.. மாரடைப்பால் திடீர் மரணம்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Mar 30, 2024 12:34 AM IST

RIP Daniel Balaji: தனித்துவமான வில்லன் நடிப்பால், அனைவராலும் அறியப்பட்ட டேனியல் பாலாஜி, சமீபத்தில் ஆன்மிகத்தின் மீது அதீத நாட்டம் கொண்டிருந்தார். கோயில் கும்பாபிஷேகம் உள்ளிட்ட பணிகளை செய்து, புதுவித மனிதராக வலம் வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் தான்..

பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார்
பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார்

ட்ரெண்டிங் செய்திகள்

2003 ம் ஆண்டு காதல் கொண்டேன் படத்தின் மூலம் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் அறிமுகமான டேனியல், அதன் பின் காக்க காக்க படத்தில் நடித்த வில்லன் கதாபாத்திரம், அவருக்கு பெரிய அளவில் பேர் வாங்கித் தந்தது. 

தொடர்ந்து பல்வேறு படங்களில் அவர் அடுத்தடுத்து நடித்திருந்தாலும், 2006ம் ஆண்டு அவர் நடித்த வேட்டையாடு விளையாடு திரைப்படம், அவருக்கு மீண்டும் பெரிய ரீ எண்ட்ரி கொடுத்தது. அமுதன் என்கிற அந்த கதாபாத்திரம், வேட்டையாடு விளையாடு படத்தின் வெற்றிக்கு பெரிய அளவில் உதவியது என்றே கூறலாம். 

அதைத் தொடர்ந்து 2007 ல் வெற்றி மாறன் இயக்கத்தில் பொல்லாதவன் படத்தில் ரவி என்கிற கதாபாத்திரமும், டேனியல் பாலாஜிக்கு பெரிய அளவில் பேரை தந்தது. ஆனாலும் அதன் பின் பெரிய அளவில் அவர் படங்களில் தோன்றவில்லை. குறிப்பிட்ட சில படங்களில் மட்டும் நடிக்கத் தொடங்கினார். 

சமீபத்தில் ஆன்மிக வழியில் அதிக நாட்டம் கொண்டவராக மாறிய டேனியல் பாலாஜி, கோயில் கும்பாபிஷேகம் உள்ளிட்ட ஆன்மிக பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். திரைத்துறையில் நேர்மையாகவும், தன் திறமை மீது அதீத நம்பிக்கை கொண்டவராகவும் காணப்பட்ட டேனியல் பாலாஜி, இளம் வயதில் காலமான சம்பவம், அவரது ரசிகர்களை மட்டுமின்றி, திரைத்துறையில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டேனியல் பாலாஜியின் இறப்பு செய்தி கேட்டு, தற்போது தான் ஒவ்வொருவராக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாளை அவரது உடல் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறும் எனத் தெரிகிறது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

IPL_Entry_Point

டாபிக்ஸ்