சுபம் போடும் சுந்தரி சீரியல்! வருத்ததில் ரசிகர்கள்! என்ன தான் ஆச்சு?
சன் டிவியில் ஓடிவரும் அனைத்து சீரியல்களும் டிஆர்பி லிஸ்டில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டு வருகின்றன. இந்நிலையில் டிஆர்பி லிஸ்டில் தொடர்ந்து முன்னிலை பெற்று வரும் ஒரு நெடுந்தொடரான சுந்தரி தொடர் தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

சன் டிவியில் ஓடிவரும் அனைத்து சீரியல்களும் டிஆர்பி லிஸ்டில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டு வருகின்றன. இந்நிலையில் டிஆர்பி லிஸ்டில் தொடர்ந்து முன்னிலை பெற்று வரும் ஒரு நெடுந்தொடரான சுந்தரி தொடர் தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சன் தொலைக்காட்சியில் இந்த சுந்தரி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் சீசன் 1 மற்றும் சீசன் 2 என இரண்டு பகுதிகளாக ஒளிபரப்பப்பட்டது. இரண்டு சீசன்களையும் சேர்த்து இதுவரை 1100 க்கும் மேற்பட்ட எபிசோட்கள் ஒளிபரப்பாகி உள்ளன.
கிராமத்து பெண்ணின் கதை
சுந்தரி சீரியலில் கேபிரில்லா செலஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அவரை தவிர்த்து ஜிஷ்ணுமேனன், கோபிகா நீலநாத் உட்பட மேலும் பல நடித்திருந்தனர். மாநிறம் உடைய ஒரு கிராமத்துப் பெண் தனது நிறத்தால் கேலிக்குள்ளாகும் போது அதனை எதிர்த்து போராடுகிறாள். பின் அவள் திருமணம் செய்து கொண்ட கணவரும் அவரை நிறத்தை காரணம் காட்டி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்.
இதற்கு நடுவில் சுந்தரிக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. அனைத்து போராட்டங்களையும் கடந்து சுந்தரி மாவட்ட ஆட்சியராகவும் பதவி ஏற்கிறார். இவரது வாழ்க்கை கதையை பல விறுவிறுப்பான காட்சிகளோடு கதைக்களத்தோடும் அமைந்து இருந்தது சீரியலுக்கு பெரும் வரவேற்பை கொடுத்து இருந்தது. இந்த சுந்தரி சீரியலை இயக்குனர் அழகர் என்பவர் இயக்கி இருந்தார்.