Sridevi : கியூட்டான ரியாக்ஷனில் ஸ்கோர் செய்த ஸ்ரீதேவி.. சுத்தி சுத்தி வந்த ரஜினி.. கால் உடைந்ததின் பின்னணி இதோ!-sridevi who scored in a cute reaction rajini who was hammered here is the background of the broken leg - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sridevi : கியூட்டான ரியாக்ஷனில் ஸ்கோர் செய்த ஸ்ரீதேவி.. சுத்தி சுத்தி வந்த ரஜினி.. கால் உடைந்ததின் பின்னணி இதோ!

Sridevi : கியூட்டான ரியாக்ஷனில் ஸ்கோர் செய்த ஸ்ரீதேவி.. சுத்தி சுத்தி வந்த ரஜினி.. கால் உடைந்ததின் பின்னணி இதோ!

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 31, 2024 07:39 AM IST

Sridevi : ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்தார். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1980களில் திரை உலகில் ஆண் நடிகர்களை விட அதிகமாக சம்பளம் வாங்கி ஆச்சரியப்படுத்தினார். இதனால் ஸ்ரீ தேவி முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் பெற்றார்.

Sridevi : கியூட்டான ரியாக்ஷனில் ஸ்கோர் செய்த ஸ்ரீ தேவி.. சுத்தி சுத்தி வந்த ரஜினி.. கால் உடைந்தன் பின்னணி இதோ!
Sridevi : கியூட்டான ரியாக்ஷனில் ஸ்கோர் செய்த ஸ்ரீ தேவி.. சுத்தி சுத்தி வந்த ரஜினி.. கால் உடைந்தன் பின்னணி இதோ!

நடிகை ஸ்ரீதேவி இந்த உலகில் உயிருடன் இல்லாவிட்டாலும் இன்றும் தமிழ் ரசிகர்களிடம் அவருக்கு தனி இடம் இருக்கிறது. ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த திரைப்பட உலகில் பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர் ஸ்ரீதேவி. அவர் தன் நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களை கட்டி வைத்திருந்தார்.

ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்தார். சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீதேவி . தனது நடிப்பு திறனால் 1980களில் திரை உலகில் ஆண் நடிகர்களை விட அதிகமாக சம்பளம் வாங்கி ஆச்சரியப்படுத்தினார். இதனால் ஸ்ரீ தேவி முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் பெற்றார்.

திரையில் ஸ்ரீதேவி கமல் ஜோடிக்கு எப்போதும் தனி ஒரு வரவேற்பு இருந்தது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் ஸ்ரீ தேவி இணைந்து 22 படங்களில் நடித்துள்ளார்.

சினிமா வரலாற்றில் மேட்சிங்கான ஜோடி

இந்நிலையில் ரஜினி ஸ்ரீதேவியை சுத்தி சுத்தி வந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து பத்திரிகையாளர் வி.கே.சுந்தர் தனது VK Sundar Updates யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, 70 களில் ரஜினி அறிமுகமான காலகட்டம். அப்போது ஸ்ரீதேவி கமல் ஹாசனுடன் அதிக படங்களில் நடித்தார். இன்று வரை தமிழ் சினிமா வரலாற்றில் மேட்சிங்கான ஜோடி என்றால் அது கமல் ஸ்ரீதேவி ஜோடி தான்.

அந்த காலகட்டத்தில் ரஜினி ஸ்ரீதேவியுடன் அதிக படங்களில் நடித்திருந்தார். 16 வயதினிலே, மூன்று முடிச்சு, போன்ற படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்களில் ரஜினி வில்லனாகத்தான் நடித்திருந்தார். அதன் பின்னர் சில படங்களில் ரஜினி ஸ்ரீதேவியுடன் ஜோடியாக நடிக்க தொடங்கினார். ஆனால் ஆரம்ப காலத்தில் ரஜினிக்கு பெரிதாக டான்ஸ் வராது. நடிகைகள் தான் அதிகமாக ஆடுவார்கள். ஒரு கட்டத்தில் 1979 ஆர்.சி. சக்தி இயக்கத்தில் ரஜினி ஸ்ரீதேவி இருவரும் தர்மயுத்தம் படத்தில் ஜோடியாக நடித்தார். அந்த படத்திற்கு டூயட் பாடலை இளையராஜா இசையமைத்தார். அந்த நேரத்தில் நடிகை ஸ்ரீ தேவிக்கு ஒரு ஆக்சிடண்ட் நடந்தது. அதில் ஸ்ரீதேவியின் கால் உடைந்து விட்டது. இதனால் புரொடக்சன் தரப்பில் சூட்டிங்கை நிறுத்தி வைப்போம் என்றனர். ரஜினியும் சரி ஸ்ரீதேவியின் கால் சரியாகட்டும் என்று நினைத்தார்.

ஆனால் ஆர்.சி. சக்தி இந்த ஒரு பாடல் மட்டும் தான் பேலன்ஸ். இந்த படத்தை நாம் உடனே வெளியிட வேண்டும் என்ற கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதனால் பாடலை எடுத்து விடுவோம் என்றார்.

கியூட்டான ரியாக்ஷனில் ஸ்கோர் செய்த ஸ்ரீதேவி

சூழலை புரிந்து கொண்ட ஸ்ரீதேவி ஒரு நாள் சூட்டிங்கிற்கு வந்தார். அப்போது அவர் மிகவும் வலியுடன் இருந்தார். இதனால் அந்த பாடலில் ஸ்ரீதேவியை ஒரு இடத்தில் உட்கார வைத்து விட்டு அவரை சுத்தி சுத்தி வந்து டான்ஸ் பண்ணுவார். ஒரு 4 இடத்தில் மட்டும் தான் ஸ்ரீ தேவி எழுந்திருப்பார். அதில் இரண்டு இடத்தில் ரஜினி தூக்கி விடுவார். ஆனால் ஸ்ரீ தேவி தன்னால் டான்ஸ் ஆட முடியாத சூழலிலும் தன் வலியை மறைத்து தன் கியூட்டான ரியாக்ஷனில் அசத்தலாக நடித்திருப்பார். அதுதான் ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி பாடல் என்ற சுவாரஸ்யமான தகவலை சுந்தர் பகிர்ந்துள்ளார்.

சினிமா தொடர்பான சுவாரய தகவல்களை அறிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்!

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.